பெர்சே 2.0 அமைப்பை பிரதிநிதிக்கும் வழக்குரைஞர்கள் உள் துறை அமைச்சரையு ஐஜிபி என்ற தேசிய போலீஸ் படைத் தலைவரையும் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிப்பதா இல்லையா என்பது மீது கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ( முறையீட்டு சிறப்பு அதிகாரங்கள் பிரிவு) ஏப்ரல் 24ம் தேதி முடிவை அறிவிக்கும்.
பெர்சே 2.0ஐ சட்ட விரோதமானது என அறிவித்த அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் அதன் ஏற்பாட்டாளர்களை தேசியப் பாதுகாப்புக்கு மருட்டல் என வருணித்தார்.
பெர்சே 2.0க்கு எதிராக சமர்பிக்கப்பட்ட 1,700 போலீஸ் புகார்களை அமைச்சரும் ஐஜிபி இஸ்மாயில் ஒமாரும் சமர்பிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு விரும்புகிறது.
பெர்சே 2.0ன் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனையும் பெர்சே 2.0 நடவடிக்கைக் குழுவையும் பிரதிநிதிக்கும் வழக்குரைஞர்கள், அமைச்சரையும் ஐஜிபி-யையும் பிரதிநிதித்த முது நிலை கூட்டரசு வழக்குரைஞர்கள் ஆகியோரது வாதத் தொகுப்புக்களை தமது அறையில் செவிமடுத்த பின்னர் நீதிபதி ரோஹானா யூசோப் முடிவு தெரிவிப்பதற்கான தேதியை நிர்ணயம் செய்தார்.
மூத்த வழக்குரைஞர்களான டோமி தாமஸ், கே சண்முக, பாஹ்ரி அஸ்ஸாட், அஸ்டோன் பைவா, அம்பிகா ஆகியோரும் அங்கு இருந்தார்கள். தாமஸ் அந்த விவகாரம் மீது வாதத் தொகுப்பைச் சமர்பித்தார்.
முதுநிலை கூட்டரசு வழக்குரைஞர் அஜிஸான் முகமட் அர்ஷாட் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரானார்.