காஜாங்கில் நடைபெறும் சீனக் கல்விப் பேரணியில் கல்வித் துணை அமைச்சர் வீ கா சியோங் யாரும் எதிர்பாராத வகையில் கலந்து கொண்டார். (மேலும் படங்கள் )
அதனைத் தொடர்ந்து பேரணிபங்கேற்பாளர்கள் அவரை ஏளனம் செய்தார்கள்.
காலை 11 மணி வாக்கில் அங்கு சென்றடைந்த வீ-யை நடுத்தர வயதுடைய ஒருவர் அணுக முயன்ற போது அவருக்கும் வீ-யின் மெய்க்காவலருக்கும் இடையில் கைகலப்பு மூண்டது.
‘325 பேரணி’ என பெயரிடப்பட்டுள்ள அந்தப் பேரணியை சீனக் கல்வி மேம்பாட்டு அமைப்பான டோங் ஜோங் ஏற்பாடு செய்துள்ளது.
சீன மொழியில் கல்வி கற்ற ஆசிரியர்கள் பற்றாக்குறை கடுமையாக இருப்பதை ஆட்சேபிக்கும் பொருட்டு அந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரணி நிகழும் நியூ எரா கல்லூரிக்கு வந்த வீ மீது, அந்தப் பிரச்னையைத் தீர்க்கத் தவறி விட்டதாக பழி சுமத்தப்பட்டுள்ளது.