போலீஸ், பாஸ் அமால் பிரிவை எடுத்துக்காட்டாகக் கொள்ள வேண்டும்

“அமால் பிரிவு தொண்டர்களுக்கு, நீங்கள் செய்தது பாராட்டப்பட வேண்டிய பணியாகும்.  ஏளனம் செய்தவர்களை நாம் அடித்துத் துன்புறுத்த வேண்டியதில்லை. காரணம் நாம் அவர்கள் அளவுக்குத் தாழ்ந்து போகக் கூடாது.”

பக்காத்தான் செராமாவில் ஏளனம் செய்தவர் பிடிக்கப்பட்டார்.

நியாயமான சுதந்திரமான தேர்தல்: அது அமால் பிரிவு செய்துள்ள நற்பணியாகும். நல்ல வேளையாக யாரும் காயமடையவில்லை. சீனர் என்ற முறையில் நான் பாஸ் கட்சியைச் சேர்ந்த அமால் பிரிவினருக்கு நான் என் முழு வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பேராக் மந்திரி புசார் இல்லத்தில் முகமட் நிஜார் ஜமாலுதீனின் கடைசி நாட்களில் அங்கிருந்த சிலரில் நானும் ஒருவன். அங்கு அமால்  தொண்டர்கள் இருந்தார்கள். அவர்கள் இருந்ததால் நான் 100 விழுக்காடு பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்தேன். அது நமது போலீஸ் படையின் கரங்களில் இருப்பதைக் காட்டிலும் மிகவும் பாதுகாப்பானது தான்.

ஏளனம் செய்வதற்காக கூலிக்கு அமர்த்தப்பட்ட அந்த நபர்களுக்கு அது பாடமாக இருக்க வேண்டும். அடுத்த அம்னோ குத்தகையைப் பெறும் போது அவர்கள் இரண்டு முறை சிந்திப்பார்கள்.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவர்களே நீங்கள் மோசமாக நடந்து கொள்கின்றீர்கள். கடந்த வார இறுதியில் புத்ராஜெயாவில் இந்தியர்கள் உங்களை நிராகரித்தார்கள். டோங் ஜோங் பேரணியில் சீனர்கள் உங்களை நிராகரித்தார்கள். கோலா சிலாங்கூரில் மலாய்க்காரர்கள் உங்களை நிராகரித்துள்ளனர்.

அப்பும்: அமால் பிரிவு தொண்டர்களுக்கு, நீங்கள் செய்தது பாராட்டப்பட வேண்டிய பணியாகும். அமைதியாக இயங்குவதுதான் சிறந்த வழி. ஏளனம் செய்தவர்களை நாம் அடித்துத் துன்புறுத்த வேண்டியதில்லை. காரணம் நாம் அவர்கள் அளவுக்குத் தாழ்ந்து போகக் கூடாது. நாம் அதனைச் செய்தால் நமக்கும் அவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

பெர்ட் தான்: அமைதியான கூட்டங்களை சீர்குலைக்க முயலும் தரப்பு பக்கம் போலீஸ் சாயும் போது இது தான் நடக்கும்.

இது போன்று பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் எந்தப் பலனும் இல்லை. உப்புச் சப்பில்லாத காரணங்களை போலீஸ் கூறுகிறது.

போலீஸ் தங்களது மூர்க்கத்தனத்தைத் தடுக்காது எனத் தெரிந்திருப்பதால் குண்டர்களுக்கு மேலும் துணிச்சல் ஏற்படும். தாங்கள் செய்ய வேண்டியதை தொடர்ந்து செய்வர். அடவாடித்தனத்தில் ஈடுபடுவர்.

அவர்களுடைய எண்ணிக்கை மிகவும் சிறியது- அதாவது 20 பேர் தான். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பேராளர் எண்ணிக்கையோ 5,000ம் ஆகும். இருந்தும் அவர்கள் அஞ்சவில்லை. காரணம் போலீசும் கூட்டரசு அரசாங்க அமைப்புக்கள் அனைத்தும் தங்களுக்கு பக்கபலமாக இருக்கும் என அவர்கள் நம்புவதாகும்.

இதற்கு போலீஸ் மீதே முழுமையாகக் குற்றம் சாட்ட வேண்டும். இத்தகைய சூழ்நிலை உருவாவதற்கு அவர்கள் வழி வகுத்து விட்டனர். நல்ல வேளையாக நல்ல சிந்தனைகள் இருந்ததால் யாருக்கும் கடுமையான காயம் ஏற்படவில்லை. அதற்கு பாஸ் அமால் தொண்டர்கள் செய்த நற்பணிகளே காரணம்.

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருக்க வேண்டுமானால் தேசிய போலீஸ் படைத் தலைவர் அந்தக் குண்டர்களை கண்டிக்க வேண்டும். தயவு செய்து நமது உள்துறை அமைச்சர் செய்ததைப் போல அவர்களை தேநீர் விருந்துக்கு அழைக்க வேண்டாம். 

என்ன நடக்கிறது: நல்ல வேளையாக மக்கள் தங்களையே காப்பாற்றிக் கொண்டார்கள். அந்த நிகழ்வை சீர்குலைக்க முயன்ற கூலிக்கு அமர்த்தப்பட்ட அந்தக் கோமாளிகளை அவர்கள் தண்டித்தனர். அங்கு போலீசார் இல்லை. அந்த கோமாளிகள் மட்டுமே இருந்தார்கள். ஏன் ?

முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் ஒருவரும் சட்டத்துறைத் தலைவரும் ரகசியக் கும்பல்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் போது நீங்கள் வேறு எதனை எதிர்பார்க்க முடியும் ?

பிஎன் பெரும் புள்ளிகள் அரச மலேசியப் போலீஸ் படை காவலர்களுடன் பொர்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்கின்றனர். ஆனால் எதிர்க்கட்சியினரும் மாற்றத்தை ஆதரிக்கின்றவர்களும் தங்களைத் தாங்களாகவே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. இதனை என்னவென்று சொல்வது ?

அடையாளம் இல்லாதவன்: தேசியப் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் அவர்களே,  செராமாக்களுக்கு இடையூறு செய்கின்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சில நாட்களுக்கு முன்பு நீங்கள் கூறியிருந்தீர்கள். இப்போது என்ன நடந்தது ?

அந்த 20 குண்டர்களையும் பிடிக்க அங்கு போலீஸ்காரர்கள் இல்லை.  13வது பொதுத் தேர்தலில் மலேசியர்கள் மாற்றத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

TAGS: