ஓணம் பண்டிகை: மலையாளிகள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடுகின்றனர்

உள்ளூர் மலையாளி சமூகம் வரும் ஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயாவில் உள்ள சிவிக் மண்டபத்தில் ஓணம் பண்டிகையை கொண்டாடுகிறது.

அங்கு நடத்தப்படும் நிகழ்ச்சிகளின் மையமாக 20 அடி நீளமுடைய மேடையில் 50 அடி நீளம் கொண்ட நாக வடிவிலான படகு ஒன்றை செலுத்துவது திகழும்.

சிலாங்கூர் கூட்டரசுப் பிரதேச மலையாளி சங்கம் ஏற்பாடு செய்துள்ள அந்த விழாவில் மீனவர் பாராம்பரிய நடனமும் குழந்தைகள் பாடல்களும் நகைச்சுவை நிகழ்ச்சிகளும் இடம் பெறும் என அதன் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் ஜி சுரே கூறினார்.

உலகம் முழுவதும் உள்ள மலையாளிகளிடையே ஓணம் பண்டிகை மிகவும் பிரபலமான குறிப்பிடத்தக்க கொண்டாட்டம் என அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

அறுவடைத் திருநாளான அது, வளமாகவும் ஒற்றுமையாகவும் பாசமாகவும் வாழும் மக்களுடைய சிறப்பான பாரம்பரியத்தையும் குறிக்கிறது.

அந்தக் கொண்டாட்டங்களில் பங்கு கொள்ள மற்ற மலேசியர்களும் அழைக்கப்படுகின்றனர்.

மேல் விவரங்களுக்கு  013-3302560, 016-6096902 ஆகிய கைத் தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

-பெர்னாமா