கடந்த 11 வாரங்களில் பிரதமர், துணைப் பிரதமர் ரிம 609 மில்லியன் செலவு!

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், துணைப் பிரதமர் முஹைடின் யாசின் ஆகிய இருவரும் கடந்த 11 வாரங்களில் நாடு முழுவதும் மேற்கொண்ட அதிகாரத்துவப் பயணங்களுக்கு ஏற்பட்ட செலவுகளை சமாளிக்க அரசாங்கம் 608.68 மில்லியன் ரிங்கிட்டை விநியோகம் செய்துள்ளது.

ஜனவரி முதல் மார்ச் 15 வரைக்கும்  அங்கீகரிக்கப்பட்ட “அந்த அவசர ஒதுக்கீடு” அவர்கள் இருவரும் 14 மாநிலங்களுக்கு மேற்கொண்ட பயணங்களின் போது செலவு செய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வமான பதிலில் கூறப்பட்டுள்ளது.

அந்தத் தொகையில் மிக அதிகமாக செலவு செய்யப்பட்டது பேராக் மாநிலத்திலாகும். அங்கு மட்டும் 220.38 மில்லியன் ரிங்கிட் செலவானது.

மாநிலங்களுக்கான பிரதமருடைய அதிகாரத்துவச் சுற்றுப்பயணங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட எல்லா உடனடி ஒதுக்கீடுகளையும் பட்டியலிடுமாறு பிரதமர் துறையை மார்ச் 27ம் தேதி பாஸ் ஜெராய் எம்பி முகமட் பிராடுஸ் ஜாபார் கேட்டுக் கொண்டிருந்தார்.

TAGS: