இன்று காலை இந்தோனிசியா வட சுமத்ராவை ரிக்டர் கருவியில் 6.7 ஆக பதிவான வலுவான நில நடுக்கம் உலுக்கியது.
அந்த நில நடுக்கத்தைத் தொடர்ந்து சிலாங்கூர், கோலாலம்பூர், கெடா, பேராக், பினாங்கு ஆகியவற்றின் பல பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
பேராக் பங்கோர் தீவிலிருந்து 363 கிலோமீட்டர் தென் மேற்கிலும் வடக்கு சுமத்ராவில் உள்ள பிஞ்சாய் நகரத்துக்கு 127 கிலோமீட்டர் தென் மேற்கிலும் நில நடுக்க மய்யம் இருந்ததாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்ட அறிக்கை கூறியது.
மலேசியாவில் சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை.
-பெர்னாமா