போட் காஸ்ட்: மரியா சின் 500,000 பெர்சே ஆதரவாளர்களை எதிர்பார்க்கிறார்

‘நடுவண மலேசியா’ என்னும் போட் காஸ்ட் (podcast) ஒலிபரப்பில் ஊடக ஆலோசகரான ஓன் இயோ, பெர்சே அமைப்பைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான மரியா சின் அப்துல்லாவுடன் பேசினார்.

அவர் பெர்சே 1.0, 2.0, 3.0 ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர். எம்பவர் (Empower) என்னும் அரசு சாரா மகளிர் அமைப்பின் இயக்குநரும் ஆவார்.

தேர்தல் ஆணையம் பெர்சே 2.0ன் கோரிக்கைகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை என மரியா அந்தப் பேட்டியில் கூறினார். அழியா மை இணைக்கப்பட்டுள்ளது மன நிறைவைத் தரவில்லை. காரணம் அதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை.

அதனால் 13வது பொதுத் தேர்தல் இது வரை இல்லாத அளவுக்குக் கறை படிந்ததாக இருக்கும் என அவர் விளக்கினார்.

நாடு முழுவதும் உலகம் முழுவதும் நடத்தப்படும் பெர்சே நிகழ்வுகளை நீங்கள் சேர்த்துக் கொண்டால் அரை மில்லியன் பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை சாத்தியமானது என மரியா குறிப்பிட்டார்.

அவர் தாம் தலைமை தாங்கும் எம்பவர் அமைப்பு பற்றியும் பேசினார். இதர பல விஷயங்களுடன் நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்ட மன்றங்களிலும் மகளிர் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு அது போராடுவதாகத் தெரிவித்தார்.

இந்த நாட்டில் பெண்கள் பங்கேற்பு விகிதம் குறைவாக இருப்பதாக மரியா வருத்தத்துடன் குறிப்பிட்டாலும் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்குகிறார். காரணம் அரசியலில் மகளிர் ஈடுபாடு குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்து வருகிறது. அடுத்த பொதுத் தேர்தலில் மகளிர் வேட்பாளர் எண்ணிக்கை இன்னும் அதிகாரிக்கும் என அவர் உறுதியாக நம்புகிறார்.