வாக்காளர் பட்டியல் மீது பொது வாதத்திற்கு வருமாறு இசி-க்கு Tindak Malaysia சவால் விடுத்துள்ளது.
வாக்காளர்களுக்குத் தேர்தல் நடைமுறைகளை அறிவுறுத்தும் அமைப்பாக Tindak Malaysia செயல்பட்டு வருகிறது.
இந்த நாட்டில் தேர்தல் தொகுதி எல்லைகளை மறு நிர்ணயம் செய்வது, தேர்தல்களை நடத்துவது போன்ற விஷயங்களையும் அந்த வாதத்தில் விவாதிக்கலாம் என அந்த அமைப்பைத் தோற்றுவித்தவரான வோங் பியாங் யாவ் கூறுகிறார்.
“அந்த முக்கியமான தலைப்பு மீது சம்பந்தப்பட்ட பொது மக்களுடன் இசி-யும் தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.”
“அது நேரடியாக ஆர்டிஎம்-மில் ஒளிபரப்பப்பட்டால் வாக்காளார் பட்டியலைத் தூய்மைப்படுத்துவது மீது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நிர்வாகம் கொண்டுள்ள கடப்பாடு மீது வாழ்க்கையின் எல்லா நிலைகளையும் சேர்ந்த மலேசியர்கள் அறிந்து கொள்ள முடியும்,” என்றார் அவர்.
Tindak Malaysia, தேர்தல் சீர்திருத்த போராட்ட அமைப்பான பெர்சே 2.0-உடன் இணைந்து தேர்தல் சீர்திருத்ததுக்குத் தேவையான பல சட்ட மாற்றங்களை நாடாளுமன்றத் தேர்வுக் குழுவிடம் (பிஎஸ்சி)பரிந்துரை செய்துள்ளது.
எண்ணற்ற போலி வாக்காளர்கள் பற்றிய தகவல்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதால் சிவில் சமுக்கத்துடன் இசி கலந்துரையாடுவது மிக அவசியம் எனக் கூறும் இசி, வாக்காளர் பட்டியலை சரி செய்யும் அதிகாரம் தனக்கு இல்லை எனச் சொல்வதாக வோங் குறிப்பிட்டார்.
பெர்சே 3.0 பேரணியை முறியடிக்க சபா அரச விசாரணை ஆணையம் அறிவிக்கப்படுமா ?
“பிரதமருடைய வார்த்தைகளுக்கும் இசி-யும் பிஎஸ்சி-யும் ஏப்ரல் 3ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் சீர்திருத்த அறிக்கைக்கும் இடையில் பெருத்த வேறுபாடு உள்ளதை நாங்கள் துரதிர்ஷ்ட வசமாகக் காண்கிறோம்.”
“பெரும்பாலும் தேர்தல் இவ்வாண்டு நிகழும் என எதிர்பார்க்கப்படுவதால் அந்த விவகாரம் அவசர அவசியமாக தீர்க்கப்பட வேண்டும்,”” என்றார் வோங்.
பிபிஎஸ் துணைத் தலைவர் என்ற முறையில் பிஎஸ்சி தலைவர் மாக்ஸிமுஸ் ஒங்கிலி, பிஎஸ்சி-யின் இறுதி அறிக்கையில் இடம் பெறாத போதிலும் சபாவில் சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களுக்கு உடனடியாக் குடியுரிமை கொடுக்கப்பட்ட விவகாரம் மீது ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 குந்தியிருப்பு ஆட்சேபத்துக்குப் பின்னர் அதன் தாக்கத்தை தணிப்பதற்கு ஆர்சிஐ அமைக்கப்படுமென நஜிப் அறிவிப்பதற்கு மாக்ஸிமுஸ் அடித்தளத்தை வகுக்கிறாரா?”
கடந்த பிப்ரவரி மாதம் நஜிப் சபாவுக்கு பயணம் மேற்கொண்ட போது ஆர்சிஐ அறிவிக்கப்படும் என பெரிதும் விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை,” என்றார் வோங்.