துணைப் பிரதமர் அவர்களே, கடன்கள் என்றால் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்று அர்த்தம்

“ஒவ்வொரு முறையும் நாம் ஏதாவது ஒன்றைக் கொடுக்கும் போது அவை உபகாரச் சம்பளங்களாக இருந்தாலும் கடன்களாக இருந்தாலும் அல்லது உதவித் தொகைகளாக இருந்தாலும் பரந்த உரிமைகளாகி விடுகின்றன.”

முஹைடின்: கல்விக் கட்டணங்களில் உதவித் தொகையாக 85 விழுக்காடு முதல் 95 விழுக்காடு வரை அரசாங்கம் தாங்கிக் கொள்கிறது

உங்கள் அடிச்சுவட்டில்: PTPTN என்ற தேசிய உயர் கல்வி நிதி பற்றிப் பேசும் போது அது நிர்வாகம் செய்யப்படும் முறையை ஆராய்வதைத் தவிர்க்க முடியாது. அது முழுக்க முழுக்கத் திறமையற்ற முறையில் நிர்வாகம் செய்யப்படுகின்றது.

கடன்கள் எப்படி, யாருக்கு கொடுக்கப்பட்டுகின்றன என்பது பற்றியும் உண்மையில் எத்தனை பேர் அதனைத் திருப்பிக் கொடுக்கின்றனர் என்பது பற்றியும் எத்தனை பேர் தாங்கள் வாங்கிய கடனில் ஒரு சென் கூட செலுத்தவில்லை என்பது பற்றியும் முழு விவரங்களை முதலில் PTPTN-னிடனிருந்து நீங்கள் கேளுங்கள்.

கல்விக் கட்டணத்துக்கு மட்டுமின்றி வாழ்க்கை செலவு அலவன்ஸுகளுக்கும் கடன்களைப் பெற்றுள்ள மாணவர்களுடைய பின்னணியை நீங்கள் ஏன் ஆய்வு செய்யக்  கூடாது?

PTPTN அமைக்கப்பட்டதின் நோக்கம் என்ன? மாணவர்களுடைய நிதிப் பின்னணிகள் எப்படி இருந்தாலும் அதிலிருந்து எல்லா மாணவர்களுக்கும் கடன் கொடுக்கப்பட வேண்டுமா?

நமது தாறுமாறான கொள்கையால் ஏற்படும் பிரச்னையே இதுதான். ஒவ்வொரு முறையும் நாம் ஏதாவது ஒன்றைக் கொடுக்கும் போது அவை உபகாரச் சம்பளங்களாக இருந்தாலும் கடன்களாக இருந்தாலும் அல்லது உதவித் தொகைகளாக இருந்தாலும் பரந்த உரிமைகளாகி விடுகின்றன.

ஒங்: நீண்ட காலத்துக்கு முன்பு மலேசிய சமுதாயத்தில் குறிப்பிட்ட ஒரு பிரிவு, அரசாங்கக் கடன்களை வருமானமாகக் கருதும் பண்பாட்டை வளர்க்கத் தொடங்கியது.

கடன் வாங்கியவர் வருமானம் பெறத் தொடங்கியதும் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதே நாம் அறிந்த நியாயம்.

நமது முட்டாள் அரசாங்கம் அத்தகையை விரும்பத்தகாத பண்பாட்டை தடுப்பதற்கு தீவிர நடவடிக்கைகளை எடுக்காததால் மற்ற மலேசிய சமூகங்களுக்கும் அது தொற்று நோயைப் போலப் பரவி விட்டது.

ரெபிகோன்: துணைப் பிரதமர் அவர்களே, இந்த விஷயத்தை தயவு செய்து எனக்கு விளக்குங்கள். நமது மக்கள் தொகை 26 மில்லியன். அதற்கு போதுமான கூடின பட்ச அளவுக்கு மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கை இயங்குகின்றன. மருத்துவர் எண்ணிக்கையில் நாம் ஏறத்தாழ தேக்க நிலையை எட்டி வருவதாக ஆரூடம் கூறப்பட்டுள்ளது.

நாம் ஏன் நமது மாணவர்களை மருத்துவக் கல்வி கற்க இன்னும் வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டும்? அது பொது நிதிகளை விரயமாக்குவதற்கு ஒப்பாகும் அல்லவா? உள்நாட்டு மாணவர்களுடைய நிதிச் சுமையை குறைக்க அந்தப் பணம் பயன்படுத்தப்படக் கூடாதா?

சிவிக்: முஹைடின் மக்களை முட்டாள்கள் என மீண்டும் எண்ணுகிறார். உயர் கல்விக்கூடக் கட்டணங்கள் மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.

அரசாங்கம் மிக அதிகமாக உதவித் தொகை வழங்குகிறது என நீங்கள் கருதினால் எங்களுக்குப் புள்ளி விவரங்களைக் கொடுங்கள்.

ரிக் தியோ: மாணவர் கட்டணங்களில் 85 விழுக்காட்டை மட்டும் கொடுப்பது போதாது. ஊழல் இல்லாத, பொது நிதிகளை விரயம் செய்யாத அரசாங்கமாக இருந்தால் எல்லா மாணவர்களுக்கும் இலவசக் கல்வியை வழங்க முடியும். ஆனால் பொது நிதிகளில் பெரும்பகுதி அம்னோ தலைவர்களுக்கும் அவர்களது சேவகர்களுக்கும் போய் விடுகிறது.

TAGS: