அரசாங்கம் PPPA என்ற அச்சுக்கூட, வெளியீட்டுச் சட்டத்துக்கு பதில் புதிய சட்டத்தை விரைவில் கொண்டு வரும்

பெரிதும் குறை கூறப்பட்டுள்ள 1984ம் ஆண்டுக்கான PPPA என்ற அச்சுக்கூட, வெளியீட்டுச் சட்டத்துக்கு பதில் புதிய சட்டத்தை அரசாங்கம் விரைவில் தயாரிக்கும். அந்தச் சட்டம் தொடர்பான குறைகளைப் போக்குவதே அதன் நோக்கமாகும்.

“அந்த உத்தேசச் சட்டம் ஆண்டுதோறும் வெளியீட்டு அனுமதிகள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற நடைமுறையை ரத்து செய்யும். அத்துடன் அந்தத் தொழிலில் சுய கட்டுப்பாட்டை அமலாக்கும் வகையில் ஊடக மன்றம் ஒன்றும் அமைக்கப்படும்,” என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார்.

அவர் இன்று மக்களவையில் 2012ம் ஆண்டுக்கான பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) மசோதாவைத் தாக்கல் செய்து பேசினார்.

அந்தப் புதிய சட்டம் “அரசியல் உருமாற்றத் திட்டத்தின்” ஒரு கூறு என்றும் அவர் சொன்னார். தேச நிந்தனைச் சட்டமும் மறு ஆய்வு செய்யப்படுவதாகவும் நஜிப் தெரிவித்தார்.

“அரசாங்கம் திறந்த தேர்வுகளுடன் அந்த சட்டத்தை முழுமையாக ஆய்வு செய்யு,” என்றார் நஜிப்.