பிரதமர்: புதிய பாதுகாப்புச் சட்டத்தில் நிவர்த்தி செய்ய இடமுண்டு

1964ம் ஆண்டுக்கான உள் நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தைப் போல் அல்லாமல் அதற்குப் பதில் அறிமுகம் செய்யப்படுகின்ற புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றவர்கள் தாங்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குப் போட முடியும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வாக்குறுதி அளித்துள்ளார்.

“தாங்கள் கைது செய்யப்பட்டதற்கான காரணம், வழிகள் மீது அவர்கள் ஹேபிய்ர்ஸ் கார்ப்ஸ் மனுவைத் தாக்கல் செய்ய சுதந்தரம் பெற்றுள்ளனர்.”

“சுருக்கமாகச் சொன்னால் நீதித் துறை மறு ஆய்வு அதிகாரம் மீண்டும் நீதிமன்றங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.”

 உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான வழிகள் மீது மட்டுமே இப்போது ஹேபிய்ர்ஸ் கார்ப்ஸ் மனுவைத் தாக்கல் செய்ய இயலும்,” என நஜிப் இன்று மக்களவையில் கூறினார்.

அவர் 2012ம் ஆண்டுக்கான பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) மசோதாவை சமர்பித்தார்.

அந்தச் சட்டத்தின் அமலாக்கத்தைக் கண்காணிக்க குழு ஒன்றும் அமைக்கப்படும் என பிரதமர் மேலும் சொன்னார். அந்தக் குழு அந்தச் சட்டத்தைத் தொடர்ச்சியா ஆய்வு செய்து தேவைப்படுமானால் திருத்தங்களையும் முன்மொழியும்.

வழக்குரைஞர் மன்றத் தலைவரும் சுஹாக்காம் என்ற மனித உரிமை ஆணையத் தலைவரும் அந்தக் குழுவில் இடம் பெறுவர் என்றும் நஜிப் சொன்னார்.