அன்வார்: இசா-வுக்கும் புதிய சட்டத்துக்கும் வேறுபாடு இல்லை

மக்களவையில் இன்று இரண்டாவது வாசிப்புக்குச் சமர்பிக்கப்பட்டுள்ள 2012ம் ஆண்டுக்கான புதிய பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) மசோதாவுக்கும் அது மாற்றாக விளங்கும்  உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்துக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.

அதில் ஏதாவது இருக்கிறது என்றால் அது மேலும் ஒடுக்குமுறையானது. அத்துமீறல்களுக்கு வழி கோலுகிறது என அன்வார் சொன்னார்.

“இசா-விலிருந்து அது எப்படி மாறுபட்டது?” என அந்த பெர்மாத்தாங் எம்பி நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்கள் சந்திப்பில் வினவினார். அவர் காலவரம்பின்றி தடுத்து வைக்க வகை செய்யும் விதியைக் குறிப்பிட்டுப் பேசினார்.

“இதற்கு முன்னர் உள்துறை அமைச்சும், போலீசும் பயன்படுத்தப்பட்டன. இப்போது நீதிமன்ற நடைமுறைகள்,” என்றார் அன்வார்.

அந்த உத்தேச சட்டத்தின் கீழ் எந்த ஒரு குற்றச்சாட்டிலிருந்தும் விடுவிக்கப்படும் ஒருவருடைய தடுப்புக் காவலை நீட்டிக்குமாறு அரசு வழக்குரைஞர் வாய்மொழியாக நீதிமன்றத்துக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கூறும் புதிய மசோதா விதி பற்றி அவர் குறிப்பிட்டார்.

“புதிய சட்டத்தின் கீழ் அது கட்டாயமாகும். நீதிபதி அதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும். வாய்மொழி விண்ணப்பம் மட்டுமே தேவை,” என வாதிட்ட அன்வார், இறுதி முடிவு ஒரே மாதிரியாகவே இருக்கும்.

“அதாவது சட்டத்தின் வழி ஒருவரை கைது செய்து காலவரம்பின்றி தடுத்து வைக்க வகை செய்யும் விதிமுறை அத்துமீறல்களுக்கு வழி வகுத்து விடும்.”

ஆயுதமேந்திய கம்யூனிஸ்ட் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக 1960ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இசா சட்டத்தின் கீழ் உள்துறை அமைச்சர் போலீஸ் வேண்டுகோள் விடுத்தால் தமது சொந்த விருப்பத்தின் பேரில் ஒருவருடைய தடுப்புக் காவலைக் கால வரம்பின்றி நீட்டிக்க முடியும்.

அதனை இசா எதிர்ப்பாளர்கள் கடுமையாகக் குறை கூறியுள்ளனர். அதற்குப் புதிய சட்டம் தீர்வு காண்பதாக அரசாங்கம் கூறிக் கொள்கிறது.