ஒரு சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்பதற்கு எதுவும் உத்தரவாதம் அளிக்க முடியாது என பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார்.
அந்தச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள ‘காப்பு வலயங்களின்’ பயன் கூட அப்போதைய அரசாங்கமும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியும் அவற்றுக்கு இணங்க செயல்படுவார்களா என்பதைப் பொறுத்துள்ளது என அவர் சொன்னார்.
“அவர்கள் அவ்வாறு செய்யா விட்டால் அத்துமீறல்கள் நடக்கக் கூடும்.”
“அரசியல் காரணங்களுக்காக யாரும் கைது செய்யப்படக் கூடாது என்று மட்டுமே நாங்கள் கூடின பட்சம் செய்ய முடியும்,” என நஸ்ரி சொன்னார்.
2012ம் ஆண்டுக்கான பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) மசோதா மீது கொள்கை அளவில் நிகழ்ந்த விவாதத்தின் போது எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் (பிகேஆர் பெர்மாத்தாங் பாவ்) தொடுத்த கேள்விக்கு நஸ்ரி பதில் அளித்தார்.
இசா என்ற 1969ம் ஆண்டுக்கான உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவதைப் போல அதற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்படும் உத்தேச புதிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போலீசாருக்குக் கொடுக்கப்பட்டுள்ள விரிவான சிறப்பு அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அரசாங்கம் என்ன உத்தரவாதம் கொடுக்கிறது என அன்வார் கேள்வி எழுப்பியிருந்தார்.

























