ரோஸ்மா: என்னை அச்சுறுத்தாதீர், மிஸ்டர் கர்பால் சிங்

பிரதமர் நஜிப்பும் அவருடைய மனைவி ரோஸ்மாவும் தாங்கள் குதப்புணர்சி II வழக்கில் அன்வார் இப்ராகிமின் சாட்சிகளாக இருக்க விரும்பவில்லை என்று அவர்களைப் பேட்டி கண்ட அன்வாரின் வழக்குரைஞர்களிடம் கூறினர்.

இத்தகவலை எதிர்தரப்பின் தலைமை வழக்குரைஞர் கர்பால் வெளியிட்டார். அதே தகவலை சங்கராவும் தெரிவித்தார்.

“பேட்டி அளிக்கும் அறைக்கு முதலில் நஜிப் வந்தார். நாங்கள் (கேள்வி) கேட்டபோது, அவர் கூறினார், ‘நான் எதிர்தரப்பின் சாட்சியாக வர விரும்பவில்லை. பேட்டியளிக்க எனக்கு விருப்பம் இல்லை'”, என்று கர்ப்பால் கூறினார்.

அடுத்து, ரோஸ்மா. அவரும் அதைத்தான் கூறினார். அவரைத் தொடர்ந்து, மலாக்கா முன்னாள் போலீஸ் அதிகாரி முகமட் ரோடானும் அவ்வாறே கூறினார்

அம்மூவரும் பேட்டி நடந்த அறையில் இருந்தார். அவர்களுடைய வழக்குரைஞர்கள் எவரும் வரவில்லை.

பேட்டியளிக்க பிற்பகல் மணி 2.55 க்கு அங்கு வந்த அவர்கள் 3.28 க்கு அங்கிருந்து கிளம்பினர்.

நஜிப் மற்றும் ரோஸ்மா அங்கு திடீரென்று காணப்பட்டது குறித்து ஆச்சரியப்பட்ட கர்பால், வழக்கமாக எங்களுக்கு முன்னதாக தெரியப்படுத்துவார்கள் என்றார்.

கேள்விகள் கேட்டபோது ரோஸ்மா பதற்றத்துடன் காணப்பட்டதோடு ஒரு கட்டத்தில் “மிஸ்டர் கர்பால், என்னை அச்சுறுத்தாதீர்” என்று கூறியதாக கர்பால் தெரிவித்தார்.

நஜிப் மற்றும் ரோஸ்மாவுடனான தமது சந்திப்பு கனிவாக இருந்தது என்று அன்வார் கூறினார்.

தாம் வழக்கம்போல் இருந்ததாகவும் கர்பால் மிகுந்த பண்புடன் நடந்து கொண்டார் என்று அன்வார் மேலும் கூறினார்.

“கர்பால் மிகுந்த பண்புடன் நடந்து கொண்டார் என்று நான் உறுதியளிக்க முடியும்”, என்று அன்வார் புன்னகையுடன் கூறினார்.