அம்னோ உறுப்பினர்களுக்கு பொதுத் தேர்தலுக்கு முந்திய விளக்கக் கூட்டங்கள்

அம்னோ கிளை, தொகுதிக் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நடப்பு விவகாரங்கள் மீது  ஒவ்வொரு மாநிலத்திலும் அம்னோ பிரச்சார, தகவல் பிரிவு “சிறப்பு” விளக்கக் கூட்டங்களை நடத்துகிறது.

13வது பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் ஒரு பகுதியாக அந்தக் கூட்டங்கள் அமைவதாக அந்தப் பிரிவின் தலைவர் அகமட் மஸ்லான் சொன்னார்.

அனைத்து 14 கூட்டங்களுக்கும் ஒரே மாதிரியான வடிவமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இறுதி விளக்கக் கூட்டம் அக்டோபர் 3ம் தேதி சபாவிலும் சரவாக்கிலும் நடத்தப்படும்.

அகமட், ஜித்ராவில் உள்ள வவாசன் ஜித்ரா மண்டபத்தில் கெடா அம்னோ உறுப்பினர்களுக்கான விளக்கக் கூட்டம் நிறைவுக்கு வந்த பின்னர் நிருபர்களிடம் பேசினார்.

“அடுத்த தேர்தல் வந்து கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். கட்சி உறுப்பினர்கள் தேர்தலுக்குத் தயாராவதற்கு உதவியாக அவர்களுக்கு அண்மையத் தகவல்களை நாங்கள் வழங்குகிறோம்,” என்றார் அவர்.

அந்தக் கூட்டங்களை பிரதமரும் அம்னோ தலைவருமான நஜிப் ரசாக் கோலாலம்பூரில் ஜுலை 10ம் தேதி தொடக்கி வைத்தார்.

ஜித்ரா கூட்டத்தை அம்னோ உதவித் தலைவர் முகமட் ஷாபி அப்டால் நிறைவு செய்து வைத்தார்.

TAGS: