முன்னாள் சிஐடி தலைவரை ஹனீப்-புக்குப் பதில் நியமிக்கலாமே ?

“முன்னாள் கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுப் பிரிவு ( சிஐடி ) தலைவர் மாட் ஜைன் நிச்சயம் நியாயமான தார்மீக சிந்தனை உடையவராகத் தெரிகிறார்”

மாட் ஜைன்: இசி தலைவர், துணைத் தலைவர் ஆகியோரை விசாரிக்க பஞ்சாயத்து மன்றம் தேவை

நியாயம்: இசி என்ற தேர்தல் ஆணையம் ஆளும் அரசியல் கட்சிக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இல்லாத தூய்மையான அமைப்பாக இருக்க வேண்டும் என்று தான் நியாய சிந்தனை கொண்ட மலேசியர்கள் விரும்புகின்றனர். அந்த ஆணையத்தை வழி நடத்தும் அவர்கள் இருவரும் அப்படி நடந்து கொண்டால் அவர்கள் பாகுபாடு காட்டாதவர்கள் என கருத முடியும்.

அதற்குப் போதுமான ஆதாரங்கள் இருந்தால் பஞ்சாயத்து மன்றம் அவசியம் அமைக்கப்பட வேண்டும்.

அவ்வாறு செய்யா விட்டால் வாக்களிப்பு முறையில் ஊழல் தொடரும். அது அரசமைப்புக்கு முரணானதாகும்.

அடையாளம் இல்லாதவன் 6137549876: இந்த நாட்டின் மிக உயரிய அமைப்புக்களான-அகோங்-கையும் ஆட்சியாளர் மாநாட்டையும் இசி-யில் உயர் பதவிகளை வகிக்கும் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப்பும் வான் அகமட் வான் ஒமாரும் ஏமாற்ற முடியுமானால் மலேசிய வாக்காளர்களை ஏமாற்றுவதற்கு வெகு நேரமாகாது.

அவர்கள் சாதாரண மோசடிக்காரர்களைக் காட்டிலும் மோசமானவர்களாக இருக்க வேண்டும். மோசமான மோசடிக்காரர்களே உலகில் மிகவும் தூய்மையான வாக்காளர் பட்டியலைப் பெற்றுள்ளதாக பிரகடனம் செய்வார்கள்.

உலகில் மிகவும் தூய்மையான வாக்காளர் பட்டியலுக்கு இணையாக உலகில் தலை சிறந்த ஜனநாயகமாகவும் மலேசியா திகழ்கிறது.

அடையாளம் இல்லாதவன் #39631158: முன்னாள் கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுப் பிரிவு ( சிஐடி ) தலைவர் மாட் ஜைன் நிச்சயம் நியாயமான தார்மீக சிந்தனை உடையவராகத் தெரிகிறார்.

இந்த நாட்டின் அரசியல் சூழலுக்கு அவர் எந்த அளவுக்கு உதவி செய்ய முடியும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். என்றாலும் நீதி, நியாயம், உண்மை ஆகியவற்றுக்கு அவர் போராடும் வரையில் நான் அவரை ஹீரோ-வாக பார்ப்பேன்.

தொடர்ந்து போராடுங்கள். உங்களைப் போன்ற மலேசியர்கள் எங்களுக்கு நிறையத் தேவை.

அடையாளம் இல்லாதவன் #06659895: சகோதரர் மாட் ஜைன் அவர்களே, நீங்கள் கொடுத்தது நெற்றியடி. சட்ட நடவடிக்கை எடுங்கள். உங்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்படும் செலவுகளுக்கு பணம் போடுவதற்கு உங்கள் வங்கிக் கணக்கை தெரிவியுங்கள். நிச்சயம் நிறையப் பேர் நன்கொடை அளிப்பார்கள்.

அதற்கு மாட் ஜைன் தலைமை தாங்கலாம். எங்களுக்கு சுதந்திரமான நியாயமான தூய்மையான வாக்காளர் பட்டியலே தேவை.

அடையாளம் இல்லாதவன் #37634848: கௌரவமான குடி மகனான மாட் ஜைன், பெர்சே 3.0ஐ விசாரிக்கும் குழுவுக்கு தலைவராக முன்னாள் தேசியப் படைத் தலைவர் ஹனீப் ஒமாருக்குப் பதிலாக நியமிக்கப்பட வேண்டும் என நான் பரிந்துரைக்கிறேன்.

உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் அவர்களே, குடிமக்கள் தரும் அந்த யோசனையை பரிசீலினை செய்வீர்களா ?

அடையாளம் இல்லாதவன்_3ec6: தங்களது கடைசி சொட்டு ரத்தம் வரை அரசர் அமைப்பு முறையை பாதுகாக்கப் போவதாக கூறிக் கொள்ளும் பெர்க்காசாவும் ஜாத்தியும் ஏன் இந்த விஷயத்தில் ஆழ்ந்த மௌனம் சாதிக்கின்றன ?

வேடதாரிகள்: அந்த விவகாரத்தில் தங்களது நிலைகளை அறிவிக்குமாறு அவற்றின் தலைவர்களை அவ்விரு அமைப்புக்களிலும் உள்ள நியாய புத்தியுள்ள உறுப்பினர்கள் கேட்க வேண்டும்.

மலேசியன் பெர்சே: சுல்தான்களையும் அகோங்கையும் ஏமாற்றியதற்காக பிகேஆர் தலைவர்கள் யாராவது இசி தலைவருக்கும் துணைத் தலைவருக்கும் எதிராக போலீசில் புகார் கொடுப்பார்களா ?

அவர்கள் இருவரும் கடுமையான குற்றத்தைப் புரிந்துள்ளனர். இந்த நாட்டின் துரோகிகள் என்று கூட அவர்கள் மீது முத்திரை குத்தலாம்.

பிகேஆர், அவர்களுக்கு எதிராக தடை உத்தரவைப் பெறுவதற்கு இதுவே சரியான தருணம். பெர்சே 4.0 நடத்தப்படுவதற்கு அவர்கள் காரணமாக இருக்க மாட்டார்கள் என நான் நம்புகிறேன்.