உங்கள் கருத்து: “மை கார்டு எண்களைப் பாருங்கள் அந்த மூன்று விஷயங்களிலும் ஒரே ஒரு இலக்கம் மட்டும் மாறியிருக்கிறது. அது தவறு அல்ல. திட்டமிடப்பட்ட மோசடி என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.”
“படியாக்கம்’ செய்யப்பட்ட வாக்காளர்கள் அம்னோ உறுப்பினர்கள்”
ஹலோ: தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் யூசோப், வாக்காளார்கள் இரண்டு முறை பதிவு செய்யப்பட்டுள்ளதற்கான காரணத்தை சாதாரண மொழியில் கூட விளக்க முடியவில்லை.
அவர் பயன்படுத்தும் கணினி முறை சரியில்லை என்றால் அவர், பெர்சே கூறும் யோசனைகளுக்குச் செவி சாய்க்க வேண்டும். அந்த தவறுகளை ( அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டவை) சரி செய்வது மிக எளிது.
ஆனால் அதனைச் செய்வதற்குத் தனக்கு அதிகாரம் இல்லை என தேர்தல் ஆணையம் தொடர்ந்து கூறி வருகிறது. இப்போது அம்னோ உறுப்பினர்கள் இரண்டு முறை வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. இது போன்று மற்ற நாடுகளில் நடந்திருந்தால் தேர்தல் ஆணையத் தலைவர் நீக்கப்பட்டு நாட்டுத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கும்.
துவா பிஜே: “முதல் பதிவின் போது சில வாக்காளார்கள் மை கார்டு எண்களை சரியாக பதிவு செய்யாமல் போனதால் அவர்கள் இரண்டு முறை பதிவு செய்திருக்கலாம். வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இல்லாததைக் கண்டு பிடித்த அவர்கள் மீண்டும் பதிவு செய்து கொண்டிருக்கலாம்.”
தேசியப் பதிவுத் துறையுடன் தேர்தல் ஆணையக் கணினி முறை இணைக்கப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன். ஆகவே எந்தப் புள்ளி விவரமும் தவறாகக் கொடுக்கப்பட்டால் அந்த முறை ஏற்காது.
அடையாளம் இல்லாதவன்_3da6: இத்தகைய கோளாறுகள் நிகழ்வதற்கு முதலில் கணினி முறை அனுமதித்திருக்கவே கூடாது. கணினி முறை பலவீனமானது அல்லது தேர்தல் ஆணையம்/தேசியப் பதிவுத் துறை அத்தகைய நுழைவுகளை அனுமதித்திருக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியல் தூய்மையானது என மக்களை நம்பவைப்பதற்கு தேர்தல் ஆணையம் தனது கணினி முறையை தேர்தல் ஆணையம் தணிக்கை செய்ய வேண்டும்.
இனவாதி அல்ல: அப்துல் அஜிஸ், நீங்கள் சாதாரண ஆங்கிலத்தைப் புரிந்து கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். தேர்தல் ஆணைய கணினி முறையில் இரட்டை அடையாளத்துக்கு என்ன காரணத்தை நீங்கள் சொன்னாலும் மக்கள் அதனை நம்பத் தயாராக இல்லை.
அடுத்த பொதுத் தேர்தலில் அழிக்க முடியாத அமை பயன்படுத்தப்படுவதற்கு தேர்தல் ஆணையம் ஏன் இன்னும் ஆட்சேபம் தெரிவிக்கிறது? அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றியை உறுதி செய்ய அந்தத் தவறுகள் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டவை என்பதை அந்த ஆட்சேபம் காட்டுகிறது.
இடைத் தேர்தல் ரசிகன்: பக்காத்தான் ராக்யாட் எழுப்பிய கோளாறுகளுக்கு மனிதத் தவறு அல்லது தொழில் நுட்பக் கோளாறு என அப்துல் அஜிஸ் கூறுகிறார். அதற்காக தேர்தல் ஆணையத் தலைவர் பொறுப்பிலிருந்து நீங்கள் நீக்கப்பட வேண்டும்.
இறைவனல்ல: தேர்தல் ஆணையத் தலைவர் பேசுவது அபத்தமாக இருக்கிறது. அதனால் அவர் கணினி அறிவு இல்லாதவரக இருக்க வேண்டும் அல்லது நம்மை ஐந்து வயது பிள்ளைகளைப் போன்று எண்ணிக் கொண்டிருக்க வேண்டும்.
பென்ஹோர்: செய்தி இணையத் தளமான மலேசியாகினி படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களக் கண்டு பிடிக்க முடியுமானால் தேர்தல் ஆணைய, தேசியப் பதிவுத் துறை கணினி முறைகளை ஆய்வு செய்ய நிபுணர்கள் அனுப்பப்பட்டால் என்ன நடக்கும் என்பதைக் கற்பனை செய்யக் கூட முடியவில்லை.
கேகன்: அம்பலமாகும் ஒவ்வொரு விஷயமும் ‘தவறு’ அல்லது ‘தொழில்நுட்பக் கோளாறு’ என நிராகரிக்கப்படுகிறது. அந்த நாடகத்தைத் தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள்.
மை கார்டு எண்களைப் பாருங்கள் அந்த மூன்று விஷயங்களிலும் ஒரே ஒரு இலக்கம் மட்டும் மாறியிருக்கிறது. அது தவறு அல்ல. திட்டமிடப்பட்ட மோசடி என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
மக்கள் இரண்டு முறை வாக்களிப்பதை அழிக்க முடியாத மை தடுத்து விடும். ஆனால் கை விரல் ரேகை முறை அப்படிப்பட்டது அல்ல. அதனால்தான் தேர்தல் ஆணையம் கை விரல் ரேகை முறையை விரும்புகிறது. அழிக்க முடியாத மையை வெறுக்கிறது.
அழிக்க முடியாத மையைப் பயன்படுத்துமாறு மலேசியர்கள் தேர்தல் ஆணையத்தை நெருக்க வேண்டும். இல்லை என்றால் எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்.
இஸானா: அழிக்க முடியாத மை மலிவானது.பயனுள்ளது. யாரும் இரண்டு முறை மூன்று முறை வாக்களிக்க முடியாது. ஆனால் அழிக்க முடியாத மையைப் பயன்படுத்தினால் தனது எஜமானரான அம்னோ/பிஎன் புத்ராஜெயாவை இழந்து விடும் என்பது தேர்தல் ஆணையத்துக்கு நன்கு தெரியும்.
இயான்2003: தேர்தல் ஆணையம் அழிக்க முடியாத மையைப் பயன்படுத்த வேண்டும். வாக்காளர் பட்டியல் பற்றிய கேள்வியே எழாது. அது இனிமேலும் காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.