மெர்தேகா தினம்: நாம் ஒரு பொய்மையை கொண்டாடிக் கொண்டிருக்கிறோமா ?

பிரிட்டிஷ்காரர்களின் காலனித்துவ ஆட்சியில் மலேசியா இருந்தது இல்லை என்றால் நாம் சுதந்திரம் கேட்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது ? எதிலிருந்து சுதந்திரம் ? பாதுகாப்புக்கு உட்பட்ட பிரதேசம் என்னும் நிலையில் இருந்தா?

 

ஹாடி: காலனித்துவ ஆட்சியில் நாடு இருந்ததே இல்லை எனக் கூறுவது அபத்தமானது

வழிகாட்டி: அந்தப் பேராசிரியர்கள் சொல்வது சரி என்றால் பிரிட்டிஷார் நம்மை காலனியாக்கவில்லை. அவர்கள் மலாயா மாநிலங்களை நிர்வாகம் மட்டுமே செய்தார்கள். அப்படி என்றால் மலாய் மாநிலங்களின் சுல்தான்கள் அந்த மாநிலங்களை தாங்களாகவே முன் வந்து பிரிட்டிஷ்காரர்களிடம் ஒப்படைத்தார்களா ?

நாம் ஏன் நமது சுல்தான்களுக்கு மாறாக நாம் மன்னரையும் இராணியாரையும் காப்பாற்றுமாறு இறைவனைக் கேட்டுக் கொண்டோம் ? நமது நாட்டின் ‘நிர்வாகத்தை’ மீண்டும் பெறுவதற்கு நாம் ஏன் போராட வேண்டும் ? அந்த பேராசிரியர்கள் சொல்வதை நாம் நம்ப வேண்டுமா ?

தான் கிம் கியோங்: நாம் காலனித்துவ ஆட்சியில் இருந்தது இல்லை என்றால் நாம் ஏன் ஒவ்வொரு ஆகஸ்ட் 31ம் தேதியும் மெர்தேகாவைக் கொண்டாடிக் கொண்டிருப்பது பெரிய பொய் ஆகும்.

நமது முதல் பிரதமர் ‘மெர்தேகா’ என நான்கு முறை முழக்கமிடுவதைக் காட்டும் ஒளிநாடாவை ஒளிபரப்புவதை நிறுத்திக் கொள்ளுமாறு அந்த ‘நிபுணர்கள்’ அரசாங்கத்துக்கு மனு அனுப்பலாமே ?

சுஹாய்லா சம்சுதீன்: பேராசிரியர்கள் சொல்வதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஏனெனில் இந்த நாடு காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டதே இல்லை. பிரிட்டிஷ்காரர்கள் பாதுகாப்பை மட்டுமே வழங்கினார்கள்.

பாஸ் கட்சிக்கும் ஹாடிக்கு மூளை பிரண்டு விட்டது. இல்லாத ஒன்றை அவர்கள் கற்பனையாக உருவாக்கிக் கொண்டுள்ளனர். உண்மையில் நாம் காலனித்துவ ஆட்சியில் இருந்திருந்தால் பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை கோரும் போது ரத்தம் சிந்தப்பட்டிருக்கும். அவ்வளவு தான்.

மிலோசெவிக்: மக்கள் சொல்வது உண்மை- அம்னோவுக்கு முன்பும் பிரிட்டிஷ் எதிர்ப்பு இயக்கங்கள் இயங்கின. எல்லாவற்றுக்கும் மேலாக மலாயான் யூனியன் எதிர்ப்புப் போராட்டத்தின் போது அம்னோ போராட்ட கருப் பொருள் ” எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்” என்பதாகும்.

உண்மைகள், நியாயங்கள் ஆகியவற்றுக்கு எதிராக வாதாடுவதின் மூலம் அம்னோவுக்கு உதவும் புனிதமான பணியைச் செய்து கொண்டிருக்கும் பேராசிரியர்கள் மன்றத்தை வாசகர்கள் ஏன் தடுக்க வேண்டும் ? உண்மையான கல்வியாளர்களுக்கு மலாயா காலனியாக இருந்த உண்மை நன்கு தெரியும்.

ஒநாய்கள்: பிரிட்டிஷ்காரர்களின் காலனித்துவ ஆட்சியில் மலேசியா இருந்தது இல்லை என்றால் நாம் சுதந்திரம் கேட்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது ? எதிலிருந்து சுதந்திரம் ? பாதுகாப்புக்கு உட்பட்ட பிரதேசம் என்னும் நிலையில் இருந்தா?

உண்மையான காலனி, பாதுகாப்புக்கு உட்பட்ட மாநிலங்கள் அல்லது பிரதேசங்கள் என நீங்கள் எப்படி அழைத்தாலும் அடிப்படை ஒன்று தான்- நம்மை பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சி செய்தனர். ஆட்சியுரிமை எனக் கூறுவது எல்லாம் பித்தலாட்டம்.

உண்மை: ஊழல் மலிந்த தேர்தல் ஆணையம், தேசியப் பதிவுத் துறையுடனும் அம்னோவுடனும் கூட்டு சேர்ந்து சபாவில் அதிகாரத்தில் நிலைத்திருக்கச் செய்ததைப் போன்று இந்த நாட்டுக்குள் ஆயிரக்கணக்கான அந்நியர்களை குடிமக்களாக அனுமதித்துள்ளது போன்ற துயரமான பிரச்னைகளிலிருந்து மக்களை திசை திருப்புவதே அம்னோவின் நோக்கம் என பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சொல்வதை நான் ஒப்புக் கொள்கிறேன்.

உண்மையில் அம்னோ இந்த நாட்டுக்குள் அதிகமான இந்தோனிசியர்களைக் கொண்டு வந்து அவர்களுக்கு போலியான குடியுரிமைகளை வழங்கியதின் மூலம் மலாய் இனத்துக்குத் துரோகம் செய்கிறது.  என்றாவது ஒரு நாள் அந்த இந்தோனிசியர்கள் மலேசியாவில் இந்தோனிசியக் கொடியை பறக்க விடப் போகின்றனர். மலாய்க்காரர்களுக்கு கிடைக்க வேண்டிய எல்லா உரிமைகளையும் பறித்துக் கொள்ளப் போகின்றனர்.

அம்னோ இந்த நாட்டிலிருந்து சீனர்களையும் மலாய்க்காரர்களையும் விரட்டி விடலாம். இந்தோனிசிய மலாய்க்காரர்களினால் இரண்டாம் தர குடிமக்களாக மலாய்க்காரர்கள் நடத்தப்படும் போது அம்னோ பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

எஸ்எம்சி77 : பிஎன் -னுக்கு ஒரு சாதாரணக் கேள்வி. பிரிட்டிஷ்காரர்களுடன் பேச்சு நடத்துவதற்கு பல்வேறு இனத் தலைவர்களைக் கொண்ட குழுவுக்கு துங்கு அப்துல் ரஹ்மான் ஏன் தலைமையேற்றுச் சென்றார் ? 60 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் விடுமுறையை உல்லாசமாகக் கழிக்கவா லண்டன் சென்றார்கள் ?

அடையாளம் இல்லாதவன்: நான் இன்னும் அதிர்ச்சியிலிருந்து விடுபடவில்லை. நம் நாட்டு வரலாற்றில் ஒவ்வொரு பகுதியும் இப்போது சர்ச்சைக்கு இலக்காகியுள்ளது.  எல்சிஇ படிப்பைக் கூட முடிக்காத ஒருவர் அதனைச் சொல்லியிருந்தால் அதனை புரிந்து கொள்ளலாம். ஆனால் படித்த பேராசிரியர்கள் அதனைச் சொல்வது அதிர்ச்சி அளிக்கிறது.