யூசோப் ஏஜி-யிடம் சொல்கிறார்: இது சொந்த விவகாரம் சம்பந்தப்பட்டது அல்ல

அன்வார் இப்ராஹிமுக்கு எதிரான குதப்புணர்ச்சி வழக்கு ll இல் அரசு தரப்பு வழக்குரைஞர் குழுவுக்குத் தலைமை தாங்கிய முன்னாள் சொலிஸிட்டர் ஜெனரல் ll முகமட் யூசோப் ஜைனல் அபிடின், பெர்சே 3.0 சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள அன்வாரை பிரதிநிதிதத்தின் மூலம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

அது சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்லுக்கும் அவருக்கும் இடையிலான தனிப்பட்ட போராட்டமாகக் கருதப்பட முடியுமா என இன்றைய நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பின்னர் யூசோப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த அவர், தாம் அந்த வழக்கை எடுத்துக் கொண்டதில் அப்துல் கனிக்கு எதிராக சொந்த விஷயம் ஏதுமில்லை எனத் தெரிவித்தார்.

“நான் தொழில் நிபுணர். அவர்கள் நேற்றிரவு என்னை அழைத்தார்கள். எனக்கும் நேரம் இருந்தது. எனக்கு அரசியல் தொடர்புகள் ஏதுமில்லை,” என்றார் அவர்.

சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்தில் மூன்றாவது உயர் நிலையில் இருந்த யூசோப், இவ்வாண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதி விருப்ப அடிப்படையில் ஒய்வு பெற்றார்.