கடந்த வியாழக்கிழமை லெம்பா பந்தாய் செராமாவில் கல்லெறிந்தவர்கள் அம்னோ இளைஞர்கள் என்று கூறும் பிகேஆர் அவர்களைக் கையும் களவுமாக பிடித்திருக்கலாமே, ஏன் பிடிக்கவில்லை?
லெம்பா பந்தாய் அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் முகம்மட் சஸாலி கமிலான் இந்தக் கேள்வியை முன்வைத்துள்ளார்.
அச்சம்பத்தைக் காண்பிக்கும் காணொளி ஆதாரத்தை பிகேஆரின் லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா வெளியிட்டதை அடுத்து முகம்மட் சஸாலி இவ்வாறு வினவினார்.
“ பிகேஆர் உறுப்பினர் ஒருவர் காயமடைந்ததும் சிகப்பாடை அணிந்த அம்னோ உறுப்பினர் ஒருவர் அவருக்கு உதவச் சென்றாராம்.
“அம்னோ இளைஞர்கள்தாம் கல்லெறிந்தார்கள் என்பது உண்மையானால் பிகேஆர் அந்த அம்னோ ஆளைப் பிடித்து வைத்திருக்கலாமே?”.
அன்றிரவே செய்ய வேண்டியதைச் செய்யாமல், இப்போது “வீடியோ ஆதாரம்” என்று ஒன்றைக் காண்பிக்கிறார்கள்.அது, “இரண்டு தரப்புகள்(அம்னோ, பிகேஆர்) மீதும் வீசப்பட்ட பொருள்கள் எங்கிருந்து வீசப்பட்டன என்பதைத் துல்லியமாகக் காண்பிக்கவில்லை”, என்றாரவர்.
“அம்னோதான் அவற்றை வீசியது என்பதற்கு என்பதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறார்?”.
குடியிருப்பாளர்களுக்கு அன்வார்மீது ‘ஆத்திரம்’
கேலி செய்தல் வன்செயல் ஆகாது.மேலும், லெம்பா பந்தாய் குடியிருப்பாளர்களுக்கும் அன்வார் அன்றிரவு அங்கு வந்தது பிடிக்கவில்லை.
“குடியிருப்பாளர்கள் தங்களுக்குள் ‘இன்னும் என்னவெல்லாம் புளுகப் போகிறாரோ’ என்று பேசிக்கொண்டார்கள்”, என்றாரவர்.
லெம்பா பந்தாய் அம்னோ இதற்குமுன், அன்வார் அம்னோவைப் பழித்துப் பேசியதுதான் கூட்டத்தில் கலாட்டாவுக்குக் காரணம் என்று கூறியிருந்தது.
ஆனால் மலேசியாகினி செய்திகள், பெட்டாலிங் ஜெயா செலாதான் உறுப்பினர் ராஜா இஸ்மாயில் ராஜா டின் தலையில் காயமடைந்ததை அடுத்துத்தான் அம்னோ இளைஞர்கள் பண்பில்லாதவர்கள், தரம் கெட்டவர்கள் என்று அம்னோ வசை பாடியதாகக் கூறுகின்றன.
அன்றிரவு கூட்டத்தில் இருந்த 12-வயது சிறுமி நுருல் பல்கிஷ் முகம்மட் இசாவுக்கும் கையில் காயமேற்பட்டது.அவரின் தந்தையும் ராஜா இஸ்மாயிலும் போலீசில் புகார் செய்துள்ளனர்.
அம்னோ, அதன் ஆதரவாளர் முகம்மட் சைபுல் புகாரியும் அன்றிரவு காயமடைந்து மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டதாகக் கூறியது.