அமலாக்க அதிகாரிகளுடைய அத்துமீறல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு கடந்த சில ஆண்டுகளாக வேண்டுகோட்கள் அதிகரித்து வருகின்றன. காரணம் அவர்களுடைய குற்றங்கள் தண்டிக்கப்படாமல் போவதே காரணமாகும்.
ஆனால் அத்தகைய குற்றங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரம் அளிக்கப்பட்ட அரசு துணை நிறுவனத்துக்கு அவை குறித்து எந்தப் புகாரும் கிடைக்கவில்லை.
EAIC என்ற அமலாக்க நிறுவன நேர்மை ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இயங்கி வருகிறது. தனக்குக் கிடைத்த புகார்களில் பெரும்பகுதி போலீஸ் பற்றியது என்றும் அதிகார அத்துமீறல் என்ற விஷயம் பற்றி எதுவும் வரவில்லை என்றும் அது தெரிவித்தது.
மனித உரிமைகளுக்குப் போராடும் அமைப்புக்களுக்கு EAIC-யின் தோற்றம் பற்றி நன்கு தெரியும். ஆனால் மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட புகார்களை அந்த ஆணையத்துக்குக் கொண்டு வருவதில்லை என அதன் தலைமை நிர்வாக அதிகாரி நோர் அபிஷா ஹானும் மொக்தார் கூறினார்.
போலீஸ் அத்துமீறல்கள் மீது பல குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்ட போதிலும் அந்த ஆணையம் ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்:
“மக்களுக்கு எங்களைத் தெரியாது என்பது உண்மையல்ல. நாங்கள் விவாதங்களைம் கருத்தரங்குகளை பொது மக்களுடன் கூட நடத்தியுள்ளோம். நாங்கள் வழக்குரைஞர் மன்றம், அரசு சாரா அமைப்புக்களின் பேராளர்களுடனும் கூட நாங்கள் விவாதங்கள் நடத்தியுள்ளோம். நாங்கள் இயங்குவது அவற்றுக்கு நன்கு தெரியும்.”
2011 ஜுலை 9 நிகழ்ந்த பெர்சே 2.0, ஏப்ரல் 28ல் நிகழ்ந்த பெர்சே 3.0 ஆகிய இரண்டு பெர்சேபேரணிகளில் போலீஸ் முரட்டுத்தனம் தொடர்பில் ஆணையத்துக்கு ஒரு புகார் கூடக் கிடைக்கவில்லை என்ற தகவலையும் நோர் அபிஷா வெளியிட்டார்.
“நாங்கள் இயங்குவது உங்களுக்குத் தெரியும். நாங்கள் செயல்படுவது வழக்குரைஞர் மன்றத்துக்குத் தெரியும். ஒப்புதல் வாக்குமூலத்தை பெறுவதற்காக ஒருவர் அடிக்கப்பட்டார் என ஊடகங்களுக்கு தெரிவிக்கின்றவர்களுக்கும் நாங்கள் இயங்குவது தெரியும். ஆகவே எங்களிடம் புகார் செய்யுங்கள்.”
“நாங்கள் நடவடிக்கை எடுக்க விரும்புகிறோம். ஆனால் நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் புகார்களைப் பெற வேண்டும். நாங்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளில் அதுவும் ஒன்றாகும். மக்கள் எங்களை நம்புவது இல்லை.”
“அவர்கள் ஏன் சுஹாக்காம்-இடம் (மனித உரிமை ஆணையம்) செல்கின்றனர் ? ஏனெனில் மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட எதுவாகவும் வழக்குரைஞர்கள் எப்போதும் கூறுவது தான் அதற்குக் காரணம்.”
“சிவில், கிரிமினல், அரசமைப்பு ஆகிய சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழும் நீங்கள் வெற்றி பெற முடியாது. ஆனால் மனித உரிமைகளின் கீழ் நீங்கள் போக முடியும். மனித உரிமைகள் என்பது விரிவானது. ஆகவே சுஹாக்காமே சிறந்தது,” என நோர் அபிஷா குறிப்பிட்டார். அவர் முன்னாள் நீதிபதி ஆவார்.
போலீஸ் புகார்கள், தவறான நடத்தை மீதான சுயேச்சை ஆணையம் அமைக்கப்படுவதற்கு போலீஸ் படையிலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதும் அரசாங்கம் அந்த யோசனனயை கைவிட்டு விட்டு EAIC என்ற அமலாக்க நிறுவன நேர்மை ஆணையத்தை அமைக்கும் யோசனையை 2009ம் ஆண்டு தெரிவித்தது. போலீஸ் மட்டுமின்றி அனைத்து அரசாங்க அமமப்புக்களின் தவறான நடத்தைகளை விசாரிக்கும் பொறுப்பு அதற்கு வழங்கப்பட்டது.