‘போலி மை கார்டுகளை” வைத்திருந்த 10,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள், கடந்த இரண்டு மாதங்களில் வாக்காளர் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர்.
அந்தத் தகவலை ஜோகூர் பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் சுஹாய்சான் காயாட் இன்று வெளியிட்டார்.
அவர் அண்மைய காலமாக வாக்காளர் பட்டியலில் காணப்படுகின்ற குளறுபடிகளை பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்.
தேர்தல் ஆணைய இணையத் தளாத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதால் தாம் அந்த பெரிய மாற்றத்தைக் கண்டு பிடித்ததாக அவர் இன்று கோலாலம்பூரில் பாஸ் தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.
அவ்வாறு அகற்றப்பட்டவர்களில் ஒரே பெயரைக் கொண்ட ஆனால் மை கார்டு எண்களில் மட்டும் சிறிதளவு மாற்றத்தைக் கொண்ட வேட்பாளர்களும் அடங்குவர் என்று அவர் சொன்னார்.
மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காட்டும் தேர்தல் ஆணைய இணையத் தளத் தோற்றங்களையும் அவர் நிருபர்களிடம் காண்பித்தார்.
“இங்கு நாங்கள் உங்களுக்கு 10 சான்றுகளை மட்டும் காட்டுகிறோம். உண்மையில் நாங்கள் அது போன்ற 10,000க்கும் மேற்பட்ட சம்பவங்களைக் கண்டு பிடித்துள்ளோம்.”
அந்தப் பெயர்கள் அகற்றுவதென தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த மை கார்டு எண்கள் போலியானவை என்பதற்கு தெளிவான சான்று என்றும் சுஹாய்சான் குறிப்பிட்டார்.
ஆகவே மை கார்டுகளை நிர்வாகம் செய்யும் தேசியப் பதிவுத் துறையும் தேர்தல் ஆணையமும் கீழ் வரும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
தேர்தல் ஆணையம் அலிஸ் என்ற இணையத் தொடர்பு முறை வழியாக தேசியப் பதிவுத் துறை புள்ளிவிவரக் களஞ்சியத்தில் உள்ள பெயர்களை சரி பார்த்த பின்னர் தனி நபர்களை வாக்காளர்களாகப் பதிவு செய்கிறது.
ஆனால் நாங்கள் சில குறிப்பிட்ட சில பெயர்கள் பற்றி ஆட்சேபம் தெரிவிக்கும் போது, தேர்தல் ஆணையம் தேசியப் பதிவுத் துறையில் சரி பார்த்து, அந்தத் துறையின் புள்ளிவிவரக் களஞ்சியத்தில் இல்லாமல் இருந்தால் மட்டுமே அந்தப் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குகிறது.
ஆகவே தேசியப் பதிவுத் துறையின் புள்ளிவிவரக் களஞ்சியத்தில் முதலில் இருந்த அந்தப் பெயர்கள் நாங்கள் ஆட்சேபித்த பின்னர் காணாமல் போனது எப்படி?
அந்த 10,000 பெயர்களை இரண்டு மாதங்களுக்குள் சரி பார்த்து பதிவுகளை தேசியப் பதிவுத் துறை எப்படி அகற்ற முடிந்தது?
ஒர் அடையாளம் உண்மையானதா அல்லது போலியா என்பதை அது எவ்வாறு முடிவு செய்கிறது?
தேசியப் பதிவுத் துறை களத்தில் இறங்கி போலியான அடையாளங்களை இரண்டு மாதங்களுக்குள் கண்டுபிடிப்பது எளிதான காரியம் அல்ல. எனவே தேர்தலில் தில்லுமுல்லு செய்யும் பொருட்டு வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக போலி மை கார்டு எண்களைக் கொண்ட பட்டியலை அது வைத்திருந்ததா என்பது அடுத்த கேள்வி ஆகும்.
போலி மை கார்டுகளை வழங்குவதில் தேசியப் பதிவுத் துறை சம்பந்தப்பட்டுள்ளதா?
தேசியப் பதிவுத் துறையின் புள்ளி விவரக் களஞ்சியத்தை அணுக முடியாத நிலையில் உள்ள பாஸ் இளைஞர் பிரிவு 10,000க்கும் மேற்பட்ட போலி அடையாளக் கார்டுகளைக் கண்டு பிடிக்க இயலுமானால் அந்தத் துறை வெளியிட்ட போலி மை கார்டுகள் உண்மையான எண்ணிக்கை எத்தனை?