மசீச தலைவர் சுவா சொய் லெக், நேற்று ஒரு நேர்காணலில் பொதுத் தேர்தல் செப்டம்பரில் நடத்தப்படலாம் என்றார்.
சீனமொழி வார சஞ்சிகையான ரெட் டொமாடோ-விடம் உரையாடிய சுவா, தம்மை அவமதிப்போரைகூட வேட்பாளர்களாக அனுமதிக்கத் தயார் என்றார்.ஆனால், அவர்கள் “வெற்றிபெறும் தகுதியுடைய வேட்பாளர்களாக” இருப்பது முக்கியம்.
“(அவருடன் கருத்துவேறுபாடுகொண்ட)ஒங் தி கியாட், சியு மெய் ஃபான் போன்றோர், வெற்றிபெற முடியும் என்று நினைத்தால் தாராளமாக போட்டியிடலாம்”, என்று சுவா கூறினார்.
வெற்றிபெறும் வேட்பாளர் என்பதை எப்படித் தீர்மானிக்கிறார் என்று வினவியதற்கு, “மக்களுக்கு வாய் இருக்கிறது, கருத்துச் சொல்வார்கள்.என்னிடம் காது இருக்கிறது, கேட்பேன்”, என்றார்.
த ஸ்டாருக்குச் சொந்தமான அந்த வாராந்திர சஞ்சிகைக்கு அளித்த இரண்டு-பக்க நேர்காணலில், “வெற்றிபெறும் வாய்ப்ப்பு அறவேயில்லாத” தொகுதிகளை மசீச கைவிடும் என்று சுவா தெரிவித்தார்.
சுவா, அமைச்சரவைக் கூட்டங்களின் ஒலிப்பதிவுகளையும் அவ்வப்போது வெளியிட வேண்டும் என்றும் முன்மொழிந்தார்.அது ஒவ்வொரு பிஎன் பங்காளிக் கட்சியும் அரசாங்கத்தில் பங்காற்றுவதை அறிந்துகொள்வதற்கு உதவும்.