பிஎன் கட்டுக்குள் இருக்கும் தொகுதி ஒவ்வொன்றுக்கும் மேலும் 1.2 மில்லியன் ரிங்கிட்டை வழங்கும் யோசனை நெருங்கி வரும் பொதுத் தேர்தல் குறித்து பிரதமர் துன் அப்துல் ரசாக் அதிகக் கவலை அடைந்துள்ளதைக் காட்டுவதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.
அந்தத் தொகையை கொடுப்பது என செய்யப்பட்டுள்ள முடிவு நிதி விதிமுறைகளை அப்பட்டமாக மீறுகிறது என அவர் சொன்னார்.
நேற்றிரவு நடைபெற்ற பிஎன் கூட்டம் ஒன்றில் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக மலேசியா இன்சைடர் என்ற செய்தி இணையத் தளம் கூறியது.
நிதி அமைச்சருமான நஜிப் 2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை செப்டம்பர் 28ம் தேதி சமர்பிக்கும் போது ஒவ்வொரு பிஎன் தொகுதிக்கும் கூடுதல் ஒதுக்கீட்டை வழங்கும் அறிவிப்புச் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.