நேற்றிரவு சிலாங்கூர் பாண்டானில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், அத்தொகுதியின் நீண்ட கால எம்பியான ஒங் தி கியாட்டை எதிர்த்து நிற்பதற்குப் பொருத்தமான வேட்பாளர் என்று பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லியை அவரது சகாக்கள் அறிமுகப்படுத்தினர்.
சுமார் 2,000பேர் கலந்துகொண்ட அக்கூட்டத்தில் பேசிய டிஏபி தெராதாய் சட்டமன்ற உறுப்பினர் ஜெனிஸ் லீ, பிகேஆர் ஒழுங்குநடவடிக்கைக் குழுத் தலைவர் டாக்டர் டான் கீ குவோங், பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா முதலிய பலரும் ரபிஸியைப் போற்றிப் புகழ்ந்தனர்.
அவரின் தலைவரும் பிகேஆர் அலோசகருமான அன்வார் இப்ராகிமும் ரபிஸியைப் புகழ்ந்தே பேசினார். தேசிய ஃபீட்போட் கார்ப்பரேசன்(என்எப்சி)ஊழலை அம்பலப்படுத்தியதற்காக ரபிஸியை அவர் பாராட்டினார்.
அந்நிகழ்வுக்குப் பின்னர் ரபிஸியைச் சந்தித்தபோது, தாம் பாண்டான் வேட்பாளர் என்பதைக் காட்டிக்கொள்ள தயக்கம் கொள்வதுபோல் காணப்பட்டார்.
“எனக்குத் தெரியாது. நான் கெமாமானுக்குக்கூட செல்லக்கூடும்”, என்றார்.அதுதான் அவரது சொந்த ஊர்.அங்குதான் அவர் போட்ட