“பிரதமர் நஜிப்-பின் புதல்வி பெரிய சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டு விட்டதாகத் தோன்றுகிறது. அதற்கான காரணத்தை அவர் தீவிரமாக ஆராய வேண்டியிருக்கும்.”
பிரதமருடைய எதிர்கால மருமகன் மீது 20 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடிக் குற்றச்சாட்டு
பார்ட்டிமுஸ்: 2020: மோசடிக்காரர் எனக் கூறப்பட்டுள்ள அந்த மனிதருடனான தமது புதல்வியின் திருமண நிச்சயதார்த்தை ஒட்டி பிரதமர் நஜிப் ரசாக் கோலாலம்பூரில் உள்ள பிரபலமான ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் பெரும் பணத்தை செலவு செய்து விருந்து வைத்தார்.
வெறும் நிச்சயதார்த்திற்கு மெக்சிக்கோ கோடீஸ்வரரான கார்லோஸ் ஸ்லிம் ஹெலு-வுக்குத் தான் இவ்வளவு பணத்தை செலவு செய்யும் பொருள் வளம் இருக்க வேண்டும்.
பல மலேசியர்கள் குறிப்பாக இந்திய வம்சாவளியினரும் ஒராங் அஸ்லி மக்களும் இன்னும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் வேளையில் அந்த ஆடம்பரமான செலவுகள் உண்மையில் கொடுமையானவை.
நஜிப்ப்புக்கு உண்மையில் மனமிருந்தால் அவர் பின்வரும் இரண்டு காரியங்களைச் செய்ய வேண்டும்:
1) மலேசியாவில் வாழும் ஏழை மக்களுக்குப் போதுமான நிவாரனத்தை வழங்குவதுடன் அவர்களுக்கு வேலை வாய்ப்புக்களையும் உருவாக்க வேண்டும்.
2) அல்தான்துயா ஷாரிபு-வின் பிள்ளைகளுக்கு தாராளமான அறக் கட்டளை ஒன்றை உருவாக்க வேண்டும். காரணம் அவரது சொந்த மெய்க்காவலர்களே அவரைக் கொலை செய்துள்ளனர்.
குயூகீ: பரிதாபத்துக்குரிய பெண். அவரது துதிரதிர்ஷ்டம் குறித்து மக்கள் இன்னும் வருத்தமடைந்துள்ளனர். அவர் பெற்றோர்களைத் தேர்வு செய்ய முடியாது. ஆனால் அவர் தகுதியான மலேசிய இளைஞரைத் தேர்வு செய்திருக்கலாம்.
மலேசியச் சட்டப்படி மலேசியப் பெண்கள் அந்நியர்களை திருமணம் செய்தால் டேனியர் நஸர்பயேவ்-வுக்கு குடியுரிமை கொடுக்க முடியாது.
அவரது திருமண நிச்சயதார்த்தம் மலேசியர்களுக்கு பெரும் செலவை ஏற்படுத்தி விட்டது. அந்த டேனியரின் நாட்டுக்கு மலேசியக் குழு சென்றதும் மலேசியாவில் நடத்தப்பட்ட நிச்சயதார்த்த விருந்தும் இன்னும் நம் நினைவில் இருக்கின்றன.
குமாரா: நூர்யானா நாஜ்வாவுக்கு இன்னொரு நிச்சயதார்த்தத்திற்கு நாம் விரைவில் ‘நிதி’ அளிக்க வேண்டிய அவசியம் ஏற்படுமா ?
வேட்டைக்காரன்: மலேசியாகினி வாசகர்களுடைய கருத்துக்களைப் படிக்கும் போது பிரதமர் நஜிப் ரசாக், அவரது மனைவி ஆகியோரது செல்வாக்கு எந்த அளவுக்கு உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
மக்கள் சந்தோஷமாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர். காரணம் மலேசியர்கள் அவர்களுடைய பேராசைக்குப் பலியாகியுள்ளனர். அவர்கள் நியாயமான சிந்தனைகளைப் புறக்கணித்துள்ளனர்.
நன்கு மதிக்கப்படும் தலைவருக்கு இது போன்ற அவமானங்கள் ஏற்படாது. அம்னோ நிலைத்திருக்க வேண்டுமானால் அது விழித்துக் கொள்வது நல்லது.
கோர்டன் சாக்கோ: அன்புள்ள பிரதமர் நஜிப் அவர்களே, நான் உங்களுக்காக வருத்தப்படுகிறேன். அந்தச் செய்தி உங்களுக்கும் ரோஸ்மா அக்காவுக்கும் அதிர்ச்சியாக இருக்க வேண்டும்.
சின்ன அரக்கன்: பிரதமர் நஜிப்-பின் புதல்வி பெரிய சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டு விட்டதாகத் தோன்றுகிறது. அதற்கான காரணத்தை அவர் தீவிரமாக ஆராய வேண்டியிருக்கும்.
டேனியருக்கு மலேசியக் குடியுரிமை கொடுக்கப்பட்டு விட்டதா என்பதை யாராவது சோதிக்க முடியுமா ? அவர் ஏற்கனவே மலேசியக் குடிமகனாகி இருந்தால் அவரை என்ன விலை கொடுத்தாவது பாதுகாக்க எல்லா வழிகளிலும் அரசாங்கம் முயற்சி செய்யும்.
மோசடி செய்வதற்கு டேனியருக்கு உள்ள ஆற்றல் நிச்சயம் நமது நாட்டுக்கு ‘சொத்து’ ஆகும்.
சக மலேசியன்: நாட்டின் பிரதமரை பிரஞ்சு நீதிமன்றங்கள் கையூட்டு, லஞ்சம் ஆகியவற்றுக்காக விரைவில் விசாரிக்கப் போவதே மோசமான செய்தி ஆகும். பங்குச் சந்தையில் “விளையாடியதாக” அவரது புதல்வர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இப்போது 20 மில்லியன் டாலர் மோசடியில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மோசடிக்காரர் ஒருவரை (அந்தக் குற்றச்சாட்டை சுமத்தியிருப்பது அவருடைய மாற்றான் தந்தையாகும்) அவரது புதல்வி திருமணம் செய்து கொள்ளப் போகிறார். ஒரே சிந்தனைக் கொண்டவர்கள் இணைவதில் வியப்பில்லை.
நூன்: அரசாங்கப் பாதுகாப்பை சார்ந்திருக்க முடியாத மாது ஒருவரிடம் பின்புறத்தைக் காட்டுவதற்கு நீங்கள் மக்களை அனுப்புகின்றீர்கள். இந்து மாது ஒருவரை மிரட்டவும் மாட்டிறைச்சி பேர்கரை விற்கவும் சட்ட ஒழுங்கில்லாத முட்டாள்களுக்கு கட்டளையிடுகின்றீர்கள்.
மக்கள் கௌரவமாகவும் விவேகமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ள வேளையில் அவர் உங்கள் ஊழல் அரசாங்கத்துக்கு எதிராகச் சதி செய்வதாகக் குற்றம் சாட்டுகின்றீர்கள். உண்மையைப் பேசும் மக்களை நீங்கள் இசா சட்டத்தின் கீழ் ஒடுக்குகின்றீர்கள்.
அது போன்ற மனிதருக்கு என்ன தான் கிடைக்கும் ? நிச்சயமாக மருமகன் என்ற வடிவத்தில் பெரிய மோசடிக்காரன்தான் கிடைப்பான்.