முஹைடின் : நான் என் கணக்குகளை அன்வாருக்குக் காட்ட மாட்டேன்

பொது மக்கள் பார்வைக்கு துணைப் பிரதமர் முஹைடின் யாசின், தமது அனைத்து வங்கிக் கணக்குகளையும் காட்ட வேண்டும் என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் விடுத்த  சவாலை  முஹைடின் நிராகரித்துள்ளார்.

காரணம் அந்த விவகாரத்தில் தமக்கு எந்த சம்பந்தமும் இல்லை என அவர் சொன்னார்.

முதலில் முஹைடின் தனது கணக்குகளை வெளியிட்டால் தாமும் அவ்வாறு செய்வதாக அன்வார் கடந்த வாரம் கூறியுள்ளதற்கு முஹைடின் பதில் அளித்தார். தமது கணக்குகளில் 3 பில்லியன் ரொக்கம், சொத்துக்கள், நிதிகள் ஆகியவற்றைச் சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் தாம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். ஆகவே அந்த விவகாரத்தை  அத்தகைய சவாலுக்கு உட்படுத்தப்படக் கூடாது என்றார் அவர்.

நிருபர் தம்மிடம் கேள்வி எழுப்பிய போது தாம் வெறுமனே கருத்துக்களை மட்டும் கூறியதாகவும் துணைப் பிரதமர் சொன்னார்.

“குற்றம் சாட்டப்பட்டுள்ளது அன்வார் ஆகும். நான் அல்ல. அதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நான் ஏன் என் கணக்குக்ளை காட்ட வேண்டும் ?” என அவர் சுங்கை பீசியில் நிருபர்கள் சந்திப்பில் வினவினார்.