அன்வார்: உதவித் தொகைகள் மக்களுக்கா அல்லது சேவகர்களுக்கா ?

கூட்டரசு உதவித் தொகைகளை அதிகரிப்பது மக்களுடைய நன்மைக்கா அல்லது சேவகர் நிறுவனங்கள் நன்மை அடையாவா என எதிர்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் வினவியுள்ளார்.

அண்மைய துணை வரவு செலவுத் திட்டத்தில் எரிபொருள், டோல் கட்டணம், சீனி ஆகியவற்றுக்கான உதவித் தொகைகள் பன்மடங்கு கூட்டப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

“நீங்கள் ‘உதவித் தொகை’ என்ற வார்த்தைகளை கேட்கும் போது அது மக்களுக்கு என்று தான் நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் நான் அதனை மறுக்கிறேன். அது சேவகர்களுக்காகும் என சொல்ல விரும்புகிறேன்,” என இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களைச் சந்தித்த அன்வார் கூறினார்.