யூபிஎஸ்ஐ என அழைக்கப்படும் Universiti Perguruan Sultan Idris பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் போராளியான அடாம் அட்லி, தம்மை அந்தப் பல்கலைக்கழகம் மூன்று தவணைகளுக்கு இடைநீக்கம் செய்ததை எதிர்த்து வழக்காடுவதற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அந்த இடைநீக்கத்தை எதிர்த்து வழக்குப் போடுவதற்கு அடாம் சமர்பித்த விண்ணப்பத்தை உயர் நீதிமன்ற நீதிபதி (முறையீட்டு சிறப்பு அதிகாரப் பிரிவு) அபாங் இஸ்காண்டார் அபாங் ஹஷிம் ஏற்றுக் கொண்டார்.
பல்கலைக்கழகக் கல்விச் சுதந்திரத்தை வலியுறுத்தி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் தேதி புத்ரா உலக வாணிக மய்யத்திற்கு வெளியில் நிகழ்ந்த மாணவர் ஆர்ப்பாட்டத்தின் போது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் உருவப் படம் இருந்த தோரணத்தை அடாம் அட்லி இறக்கினார். அதனைத் தொடர்ந்து அவரை மார்ச் 8ம் தேதி யூபிஎஸ்ஐ பல்கலைக்கழகம் இடைநீக்கம் செய்தது.
அவர் சார்பில் வழக்குரைஞர் பாடியா நாட்வா பிக்ரி ஆஜரானார்.