டெக்சி ஓட்டுனர்களை விடுவிப்பாரா நஜிப்?

“அம்னோ பணம் பண்ணுவதற்கு உருவாக்கிய ஒரு வழிமுறைதானே அது. அப்படியிருக்க அந்த நவீன அடிமைத்தனத்திலிருந்து டெக்சி ஓட்டுநர்களை நஜிப் ‘விடுவிக்க முயல்வது’ ஏன்?”

‘நவீன அடிமைத்தனத்திலிருந்து டெக்சி ஓட்டுனர்களை விடுவிக்க பிரதமர் சூளுரை

மாற்றம்விரும்புபவன்: டெக்சிகளுக்கான உரிமங்களை வைத்துக்கொண்டு  ஏகபோக உரிமை கொண்டாடும் தனியார் நிறுவனங்கள்தானே புது டயர்கள் வாங்கவும் டெக்சிகளின் காப்புறுதிக்கும் பணம் கொடுக்க வேண்டும்.

அப்படியிருக்க எதற்காக மக்களின் வரிப்பணத்தைக்கொண்டு டெக்சி ஓட்டுனர்களுக்கான ரிம35 மில்லியன் நிதியை அமைக்க வேண்டும்?

கரு மம்பா: இந்த அடிமைத்தனத்தை உருவாக்கியதே பிஎன்தானே. அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள பூமிபுத்ராக்களும்  அவர்களுக்கு  வேண்டியவர்களான பூமிபுத்ரா-அல்லாதாரும் டெக்சி உரிமங்களை வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகிறார்கள்.

நீண்டகாலத் தவணைக் கொள்முதல் முறை, உயர்ந்த அன்றாட வாடகைத் தொகை, டெக்சிகளைத் திரும்ப வாங்குவதாக இருந்தால் அதற்குக் கூடுதல் பணம் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை முதலியவற்றால் டெக்சி ஓட்டுனர்களை அடிமைகளாக்கி வைத்துக்கொள்கிறார்கள்.

இதற்குத் தீர்வு காண டெக்சிக்கான உரிமங்கள் டெக்சி ஓட்டுநர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும்.ஆண்டுக்கு ரிம520 பெறுமதியுள்ள டயர்களைக் கொடுப்பதால் மட்டும் டெக்சி ஓட்டுனர்களின் துயர் நீங்கி விடாது.

கிம் குவெக்: பிரதமர் நஜிப்பின் அறிவிப்பு இவ்வளவு காலமாக அம்னோ அவர்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளது என்பதைத்தான் சொல்ல வருகிறது.

திடீரென்று 70,000 டெக்சி ஓட்டுனர்களின்மீது கரிசனம் கொண்டு அவர்களுக்கு டயர் வாங்க ரொக்கப் பற்றுச்சீட்டுகள் கொடுக்கப்படுவது ஏன்?இதற்குத் தேர்தலில் வாக்குகளைக் கவரும் நோக்கத்தைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

இச்செயல் அப்பட்டமான தேர்தல் கையூட்டு அல்லாமல் வேறு என்ன?இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தவை தகவல் அமைச்சு, 1எம்டிபி, ஸ்பேட் (1MDB and Spad )ஆகியவையாகும். அரசுதுறைகளான  இவை அம்னோவுக்கு ஆதரவாக வாக்குகள் பெறுவதற்குப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளன.

சுருக்கமாக சொல்வதானால், நஜிப் இங்கு இரண்டு குற்றங்களைப் புரிந்துள்ளார்:1) வாக்காளர்களுக்குக் கையூட்டுக் கொடுப்பது,2) அதிகார அத்துமீறல் செய்து அரசுதுறைகளையும் பொதுப்பணத்தையும் வாக்குகள் பெறப் பயன்படுத்திக்கொண்டிருப்பது.

நம்பாதவன்: முதலில், டெக்சி உரிமங்களை ஒரு சில  தனியார் நிறுவனங்களின் ஏகபோக உரிமையாக்கியது யார்?அம்னோ / பிஎன் அரசுதானே!அந்த உரிமங்களில் பெரும்பகுதியை அம்னோ கோமாளிகளும் அம்னோவின் அல்லக்கைகளும்தானே வைத்திருக்கிறார்கள்.

அவர்கள்தான் இடைத்தரகர்கள்.பாவம், டெக்சி ஓட்டுனர்கள்,சம்பாதிப்பதையெல்லாம் அவர்களிடம் கொண்டுபோய்க் கொட்டுகிறார்கள். இந்த அம்னோ கோமாளிகளும் அல்லக்கைகளும் காலாட்டிக்கொண்டே பணம் பண்ணுகிறார்கள். இதுதான் 21ஆம் நூற்றாண்டின் நில மான்ய அமைப்புமுறை.

சுலோகங்களுக்குப் பெயர்பெற்ற நஜிப், தம்மை டெக்சி ஓட்டுனர்களின் அனுதாபிபோலக் காண்பித்துக்கொள்ளப் பார்க்கிறார். அவரின் இந்தக் கபட நாடகத்தை டெக்சி ஓட்டுனர்கள் கண்டுகொள்ள வேண்டும் . அவரிடம் ஏமாந்து விடக்கூடாது.

நியாயம் வேண்டுவோன்: பேச்சுக்கும் பஞ்சமில்லை, அள்ளிக் கொடுக்கும் வாக்குறுதிகளுக்கும் பஞ்சமில்லை. டெக்சி நிறுவனங்களையும் உரிமங்களையும் வைத்திருப்பவர்கள் யார்?

ஜேம்ஸ்1067: டெக்சி ஓட்டுனர்கள் காலம் பூராவும் டெக்சி உரிமங்களை வைத்திருப்போருக்கு அடிமைவேலைதானே செய்து வந்திருக்கிறார்கள். இந்நிலை முன்பே இருந்ததை அறியாதவர்போல் பேசுகிறார்.இதுவும் இன்னொரு வெற்று வாக்குறுதிதான்.

????: நஜிப் அவர்களே, டெக்சி உரிமங்கள் வைத்திருக்கும் தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள் உங்கள் அம்னோ ஆள்கள்தான்.

டெலி: டெக்சி உரிமங்கள் அம்னோ ஆள்களுக்குக் கொடுக்கப்படும்.அவர்கள் அவற்றை சீன வணிகர்களிடம் குத்தகைக்குக் கொடுப்பார்கள். சீன வணிகர்கள் கார்களை வாங்கி டெக்சி ஓட்டுநர்களிடம் வாடகைக்கு விடுகின்றனர்.

ஆக,பணம் பண்ணுவதற்கு ஒரு சிறந்த வழியை அம்னோ கண்டுபிடித்துள்ள வேளையில் அதிலிருந்து டெக்சி ஓட்டுனர்களை விடுவிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?

பால் வாரன்: என்ன பிரதமர் இவர்? இதை முதலில் சொன்னவர் அன்வார் இப்ராகிம்.இப்போது இவர் செய்யப்போவதாகக் கூறுகிறார்.

முன்பே, நஜிப் இதைச் செய்திருக்கலாம்.ஆனால், பொதுத் தேர்தலில் தோற்பது நிச்சயம் என்று தெரிந்ததும் டெக்சி ஓட்டுனர்களுக்கு தனித்தனியே உரிமங்கள் தரப்படும் என்கிறார், புது டயர் வாங்க ரிம520 வெகுமதியாகக் கொடுக்கப்படும் என்கிறார்.எதற்காகக் காத்திருக்க வேண்டும்.இப்போதே கொடுக்கலாமே.

ஓடின்: நஜிப் உண்மை பேசுபவராக இருந்தால், இப்போதே அம்னோபுத்ராக்களிடமும் அவர்களின்   அல்லக்கைகளிடமும் உள்ள உரிமங்களை மீட்டு அவற்றை டெக்சி ஓட்டுநர்களுக்கே கொடுக்க வேண்டும்.

TAGS: