டிஏபி: பாதுகாப்பு நிலைமை மோசமடைந்துள்ளதற்கு கொள்ளை இன்னொரு அறிகுறி

மலாக்கா முதலமைச்சர் அப்துல் ரஹிம் தம்பி சிக் வீட்டில் அண்மையில் நிகழ்ந்துள்ள கொள்ளைச் சம்பவம், அரசாங்கம் மறுத்த போதிலும் பொதுப் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்துள்ளதைக் காட்டுவதாக டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறுகிறார்.

“குற்றச் செயல்கள் பற்றி ஊடகங்களில் வெளி வந்துள்ள தகவல்களை உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் நிராகரித்துள்ளது, கொள்ளைச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய துன்பங்களை மட்டுமின்றி குற்றச் செயல்கள் குறித்து மக்கள் கொண்டுள்ள உண்மையான கவலையையும் உணராமல் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டிருப்பதைக் காட்டுகிறது.”

“மிக முக்கியமான பிரதமர்களே பாதுகாப்பாக இல்லாத வேளையில் சாதாரண பொது மக்கள் எப்படிப் பாதுகாப்பாக இருக்க முடியும் ? என லிம் இன்று விடுத்த ஒர் அறிக்கையில் வினவியுள்ளார்.

கோலாலம்பூரில் உள்ள அப்துல் ரஹிமின் வீட்டில் கடந்த சனிக்கிழமை கொள்ளையடிக்கப்பட்டது. அப்போது அவரது குடும்பத்தினர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வெளியில் சென்றிருந்தனர். அளவு தெரிவிக்கப்படாத ரொக்கமும் ஒரு பிஸ்டலும் திருடப்பட்டுள்ளன.

குற்றச் செயல்கள் அதிகரித்து வருவது குறித்து புள்ளி விவரங்களை பெரிதும் நம்பியிருக்கும் உள்துறை அமைச்சின் கருத்துக்கள் “சோம்பலானது, தவறானது” என பினாங்கு முதலமைச்சருமான லிம் குறிப்பிட்டார்.

காரணம் கிரிமினல்களினால் ஏற்பட்ட இழப்புக்கும் காயத்துக்கும் “மனிதப் பார்வை” கிடையாது என்றார் அவர்.

“குற்றச் செயல்கள் குறைந்துள்ளதைப் புள்ளிவிவரங்கள் காட்டினாலும் தனிநபர் ஒருவர் பாதுகாப்பு உணர்வை பெற்றுள்ளாரா என்பதே முக்கியமாகும்.”

“குற்றச் செயல்கள் குறியீடு குறைந்துள்ளதால் ஒருவர் பாதுகாப்பாக இருப்பதாக ஒருவரிடம் இப்போது சொல்வது பொருத்தமாக இருக்காது. காரணம் கிள்ளான் பள்ளத்தாக்கில் மாது ஒருவர் கார் நிறுத்துமிடத்துக்கு செல்வது பாதுகாப்பாக இல்லை என்து கருதுகிறார்.