தலாம் கார்ப்பரேஷன் பெர்ஹாட்-டின் கடன்களை மறுசீரமைப்புச் செய்த சிலாங்கூர் மாநில அரசாங்க முதலீட்டு நிறுவனமான Menteri Besar Incorporated (MBI) மேற்கொண்ட பரிவர்த்தனைகளை முழுமையாக சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் விவாதிப்பதற்கு ஒப்புதல் தெரிவிக்க மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் இன்று மறுத்து விட்டார்.
எல்லா விவரங்களையும் முறையாக கணக்கிடுவதற்கு உதவியாக தொழில் நிபுணர்கள் அதனை மேற்கொள்ள விட்டு விடுவதே சாலச் சிறந்தது என காலித் எனச் சட்டமன்றத்தில் கூறினார்.
“தொழில் நிபுணர்களிடம் அதனை விட்டு விடுவோம். அது முறையாக மேற்கொள்ளப்பட்டதா இல்லையா என்பதை அவர்கள் விளக்குவர். நான் இப்போது விளக்க மாட்டேன். அதற்கு இது இடம் அல்ல. நான் அவர்களிடம் விட்டு விடுகிறேன்,” என காலித் சொன்னார்.
மாநில துணை வரவு செலவுத் திட்ட மசோதா மீதான விவாதத்தை அவர் முடித்து வைத்துப் பேசினார். தவறான புரிந்துணர்வுகள் தொடருவதை தவிர்ப்பதற்காக MBI பரிவர்த்தனைகள் மீது ஆய்வு செய்து அறிக்கை வழங்குவதற்கு ஐந்து அனைத்துலக கணக்காயர் நிறுவனங்களை மாநில அரசாங்கம் நியமிக்கும் என்ற தகவலையும் காலித் அப்போது வெளியிட்டார்.