குற்ற-எதிர்ப்பு நிதியின் பெரும்பகுதி விளம்பரத்துக்காக செலவிடப்படவில்லை

அரசாங்க உருமாற்றத் திட்டத்தின்கீழ் குற்ற-எதிர்ப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் பெரும்பகுதி பிகேஆர் கூறிக்கொள்வதுபோல் “விளம்பரத்துக்காக” செலவிடப்படவில்லை என்கிறது நிர்வாக, அடைவுநிலை, சேவையளிப்பு  பிரிவு(பெமாண்டு).

விளம்பரத்துக்காக செலவிடப்பட்டது 0.75விழுக்காடு அதாவது ரிம1.8மில்லியன் மட்டுமே என்கிறார் தேசிய முக்கிய அடைவுநிலை பகுதி(என்கேஆர்ஏ) குற்றக்குறைப்பு இயக்குனர் ஈஜின் தே.

இன்று ஊடகங்களிடம் பேசிய தே, பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் செவ்வாய்க்கிழமை குறிப்பிட்ட தொகையில், கூடுதலாக போலீசையும் ரேலா போன்ற அமைப்புகளையும் காவல் பணியில் ஈடுபடுத்துவதற்காகும் செலவுத் தொகையும் உள்ளடங்கி இருப்பதாக தெரிவித்தார்.

அதனால்தான் குற்ற-எதிர்ப்பு நிதி ரிம170மில்லியன் என்று குறிக்கப்பட்டுள்ளது என்றார்.