ஹூடுட் சட்டம் அமலாக்கப்பட வேண்டும் என்று ஜொகூர் அம்னோ கெமெலா சட்டமன்ற உறுப்பினர் அயுப் ரஹ்மாட் முன்வைத்த கோரிக்கைக்கு அம்னோ புத்ரி தலைவர் ரோஸ்னா அப்துல் ரஷிட் ஷிர்லின் தெரிவித்துள்ள ஆதரவு அக்கோரிக்கை வலுப்பெற்று வருவதைக் காட்டுகிறது.
அந்தக் கோரிக்கையை புத்ரி இயக்கம் ஆக்ககரமானதாகக் கருதுகிறது, ஆனால் அதைக் கவனமாகவும் விசாலமாகவும் அமல்படுத்த வேண்டும் என்று ரோஸ்னாவை மேற்கோள் காட்டி மலாய் நாளிதழ் சினார் ஹரியான் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஹூடுட் சட்டம் அமலாக்கப்பட வேண்டும் என்று எதிர்கட்சியும் சில அம்னோ தலைவர்களும் விடுத்துள்ள கோரிக்கை ஆக்ககரமானதாகும் என்று அவர் கூறினார்.
“ஹூடுட் சட்டம் விசாலமாக அமலாக்கப்படுவதற்கு நாம் தயாராக வேண்டும்; இந்நாட்டின் பல்லின சமுதாயம் தெளிவாக புரிந்துகொள்வதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும் ஏனென்றால் அந்தச் சட்டம் பல கிளைகளைக் கொண்டது”, என்றாரவர்.