அந்தக் கட்சி பண அரசியலில் மூழ்கியிருப்பதை ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளது. பல ஊழல்களிலும் சிக்கியுள்ளது. இப்போது ஹுடுட் சட்டத்துக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்கின்றது.
ஹுடுட் சட்ட அமலாக்கத்தை புத்ரி அம்னோ ஆதரிக்கிறது
போத்தாக் சின்: இது குறித்து மசீச என்ன சொல்லப் போகிறது ? டிஏபி தலைவர் வெளிப்படையாக ஹுடுட் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள போதும் பாஸ் ஹுடுட் சித்தாந்தத்தை ஏன் டிஏபி எதிர்க்கவில்லை என மசீச கேள்வி எழுப்பிக் கொண்டே இருக்கிறது. இப்போது அதன் மூத்த சகோதரர் அம்னோ அதே விஷயத்தை ஆதரிக்கிறது.
ஜெரோனிமோ: ஹலோ மசீச தலைவர் சுவா சொய் லெக் அவர்களே நீங்கள் எங்கே இருக்கின்றீகள் ? ஹுடுட் அமலாக்கம் பற்றி மசீச-அம்னோ விவாதத்தை நடத்தலாமே ?
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் இஸ்லாமிய நாட்டுப் பிரகடனத்தை ஆதரித்தவர் தானே நீங்கள். ஆகவே உங்களை எது தடுக்கிறது ?
ஸ்டிரைட்: நடுவணப் பாதையில் செல்வதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எடுத்துள்ள எல்லா முயற்சிகளும் வீணாகப் போவதாகத் தோன்றுகிறது. காரணம் அவரது மக்கள் தீவிரமான வலச்சாரியாக மாறுகின்றனர்.
விசுவாசி: இதற்குப் பெயர் தான் இரட்டை வேடம். பாஸ் அதனை முன்மொழிந்த போது அந்த வேடதாரிகள் அது தீவிரவாதம், கொடுமையானது, பின்னோக்கிச் செல்வது எனக் கூச்சல் போட்டனர்.
அம்னோ தலைவர் அதனை முன்மொழியும் போது எல்லா வேடதாரிகளும் அதற்கு ஆமாம் போடுகின்றனர்.
அது பாஸ் கட்சிக்கு ஏன் பக்காத்தான் ராக்யாட்டுக்கும் கூட ஆதரவான விஷயம் என்றே நான் கருதுகிறேன். (சிலர் அதனை ஒப்புக் கொள்ளாமல் போகலாம்)
சுவா சொய் லெக்-கும் அவரது ஆதரவாளர்களும் நன்றாகச் சிக்கிக் கொண்டு விட்டனர். இது மசீச தலைவருக்கு விழுந்த அடியாகும்.
பாஸ்-ஹுடுட் மீது டிஏபி -கர்பால் நிலை என்னவென்று வினவுவதற்குப் பதில் அந்தக் கேள்வியை சுவா-விடமும் அவரது மசீச கும்பலிடமும் எழுப்ப வேண்டும்.
சுதந்திர மலேசியா: ஹுடுட் சட்டத்தை அமலாக்க விரும்புவதாக சொல்வது அம்னோவின் கபட நாடகம் போடுகிறது. இப்போது பாஸ் கட்சிக்கு ஆதரவளிக்கும் மலாய் முஸ்லிம்களைக் கவரவே அது விரும்புகிறது.
ரூபன்: அந்தக் கட்சி பண அரசியலில் மூழ்கியிருப்பதை ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளது. பல ஊழல்களிலும் சிக்கியுள்ளது. இப்போது ஹுடுட் சட்டத்துக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வதைக் கற்பனை செய்து பாருங்கள்.
பல இனங்களைக் கொண்ட நமது நாட்டில் ஹுடுட் அல்லது இஸ்லாமியச் சட்டங்களுக்கு இடமில்லை என அது சொன்னதாக எனக்கு நினைவில் உள்ளது.
ஆகவே அம்னோவை நம்பவே கூடாது. இந்த விஷயத்தில் பிஎன் உறுப்புக் கட்சிகள் ஏன் மௌனமாக இருக்கின்றன ? டிஏபி/பாஸ் என வரும் போது மட்டும் அவற்றின் பல்லவி மாறி விடுகிறது.
தேசிகான்: புத்ரி அம்னோ தலைவி அப்துல் ரஷீட் ஷிரிலின் அவர்களே தயவு செய்து உண்மை நிலையை அறிந்து கொள்ளுங்கள். எதிர்த்தரப்பான பக்காத்தான் ராக்யாட் ஹுடுட் சட்டங்களை ஆதரிப்பதாக சொல்லவே இல்லை.
ஒடின்: மலேசியா பல சமயங்களையும் பல இனங்களையும் பல பண்பாடுகளையும் கொண்ட நாடு ஆகும். இது 21வது நூற்றாண்டு ஆகும். 6வது நூற்றாண்டு அல்ல. ஆகவே நான் ஹுடுட் அமலாக்கத்தை எதிர்க்கிறேன்
வீரா: புத்ரி அம்னோ, நீங்கள் பிரதிநிதிப்பதாகக் கூறிக் கொள்ளும் இளைஞர்களிடமிருந்து நீங்கள் வெகு தொலைவு விலகிச் சென்று விட்டீர்கள். அவர்கள் விரும்புவது கே பாப் இசை. ஹுடுட் அல்ல.