அரசியல் கட்சிகள் எதிர்வரும் தேர்தலில் செராமாக்கள் நடத்த போலீஸ் அனுமதிக்கு விண்ணப்பித்துக்கொள்ளத்தான் வேண்டும்.ஏனென்றால் அமைதிப்பேரணி சட்டம்(பிஏஏ) தேர்தல் பரப்புரைகளுக்குப் பயன்படாது என்று தேர்தல் ஆணையம்(இசி) கூறுகிறது.
அதைத் தேர்தல் பரப்புரைகளுக்குப் பயன்படுத்த முடியாது என்று பிஏஏ பிரிவு1(3) குறிப்பிடுகிறது.
என்றாலும், எல்லா செராமாக்களுக்கும் அனுமதி அளிக்குமாறு மாவட்ட போலீஸ் தலைவர்களிடம் தேர்தல் ஆணையம் தெரிவிக்கும் என இசி துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார் உத்தரவாதம் அளித்தார்.
வான் ஒமார்,இன்று புத்ரா ஜெயாவில், தீவகற்ப மலேசியாவின் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசினார்.