ஹிஷாம்:குற்றம் தொடர்பில் மக்களின் உணர்வுக்குத்தான் முன்னுரிமை

குற்றம் மீதான பொதுமக்களின் உணர்வைக் கவனிப்பதாக உறுதி கூறியுள்ள உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன், அதுதான் “அதி முக்கியமானது” என்றார்.

 

“என்னப் பொறுத்தவரை (குற்றக்)குறியீடு அவ்வளவு முக்கியமல்ல.மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதே மிகவும் முக்கியமானது.

 

“நிறைய செய்திருக்கிறோம்.ஆனால் அது மக்களின் அச்ச உணர்வைக் குறைக்கவில்லை என்கிறபோது கூடுதலாக செய்ய வேண்டியுள்ளது, அதைச் செய்வோம்”, என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

 

இதற்குமுன் ஹிஷாமுடின், குற்றச்செயல்கள் கூடியிருப்பதாகக் கூறினால் அக்கூற்றை ஒதுக்கித் தள்ளுவார், போலீசின் குற்றப்பட்டியலில் குற்றங்கள் இறங்குமுகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டுவார்.

இன்று, பெவிலியன் பொருள் விற்பனை மையத்தைச் சுற்றி வலம் வந்த ஹிஷாமுடின், அரசாங்கம் குற்றச்செயல்கள் குறித்து  மக்கள் அச்சம் கொண்டுள்ளதை “மறுக்கவில்லை” என்றார்.

 

தேசிய முக்கிய அடைவுநிலை பகுதிகளில்(என்கேஆர்ஏ) குற்றம் சம்பந்தப்பட்ட விவகாரங்களைக் கவனிக்க ஓர் உயர் அதிகாரியை நியமனம் செய்வதென உள்துறை அமைச்சும் போலீசும் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

 

அவ்வதிகாரி குற்றம் மீதான அரசாங்கக் கொள்கைகளையும் களத்தில் போலீஸ் பணிகளையும் ஒருங்கிணைப்பார்.

 

அந்த அதிகாரியின் பெயர் நாளை  அறிவிக்கப்படும்.

 

 

 

 

TAGS: