“இனப் பதற்றம் என்றும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள வேளையில் அந்த நிகழ்வின் ஒரு பக்கக் கதையை மட்டுமே சித்தரிக்கும் திரைப்படத்தை ஒளிபரப்புவது சரியா?”
புதிய மே 13 திரைப்படம் சர்ச்சையை மூட்டியுள்ளது
ஏஜிஎம்: 1990ம் ஆண்டுகளின் மத்தியில் காலஞ்சென்ற யாஸ்மின் அகமட் இயக்கிய பெட்ரோனாஸ் ஹரிராயாவி ளம்பரக் குறும்படத்துக்கு நானும் வேலை செய்தேன். அதில் மே 13 கலவரத்தின் போது மலாய் சீன அண்டை வீட்டுக்காரர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொண்டதை அந்தப் படம் சித்தரித்தது.
துரதிர்ஷ்டவசமாக அந்த நிகழ்வை நேரடியாகக் குறிக்கும் காலண்டரை மட்டுமே- அது இன உணர்வுகளைத் தூண்டி விடும் என்ற அச்சத்தினால்-தணிக்கையாளர்கள் நீக்கினர்.
ஆனால் இப்போது இனப் பதற்றம் என்றும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள வேளையில் அந்த நிகழ்வின் ஒரு பக்கக் கதையை மட்டுமே சித்தரிக்கும் திரைப்படத்தை ஒளிபரப்புவது சரியா ? அரசாங்கம் அதிகாரத்தை இழப்பதற்கு முன்னர் இந்த நாட்டின் ஆத்மாவையே அழித்து விடும் எனத் தோன்றுகிறது.
அனாக் பினாங்கு: ஜெர்மானியர்களை மூளைச் சலவை செய்வதற்கு நாஸிக்கள் பிரச்சாரத் திரைப்படங்களைத் தயாரித்ததை நான் கேள்விப்பட்டுள்ளேன்.
ஏற்கனவே உத்துசான் மலேசியாவில் Der Sturmerன் மறு பதிப்பு வேலை செய்கின்றது. இப்போது இயக்குநர் சுகாய்மி பாபா, ஜோசப் கோயபல்ஸ் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
Hati Malaya 1957ன் இனவாத வசனங்களை நான் இன்னும் மறக்கவில்லை. சீன கடை உரிமையாளர்கள் பணக்காரர்கள் என்றும் அவர்கள் மலாய் விவசாயியை கசக்கி பிழிகின்றனர் என்றும் மலாய் பிள்ளைகளுடைய உணவுப் பொருட்களைத் திருடுகின்றர் என்றும் அதில் எழுதப்பட்டிருந்தது. இப்போது இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது.
விவேகமானவன்: உங்களில் யாரும் அந்தப் படத்தைப் பார்க்கவில்லை. ஆனால் அதன் கோளாறு பற்றிக் கருத்துக் கூறியுள்ளீர்கள். அதன் இணைய வெளியீடு வெறும் குப்பை.
உயிர் தப்பியவன்: அது அம்னோ/பிஎ பிரச்சாரம் என்பதை உணர நான் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டுமா ? அதற்கு தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகமும் பல்லூடக மேம்பாட்டுக் கழகமும் நிதி உதவி செய்துள்ளன.
அத்துடன் இந்த நேரத்தில் அது திரையிடப்படுவதும் அது நல்ல நோக்கத்துக்கு அல்ல என்பதை உணர்த்துகின்றது.
மலாய் உணர்வுகளைத் தூண்டி விடுவதைத் தவிர வேறு எந்த நோக்கமும் அதில் இல்லை. ஆனால் நம்மைப் போன்று மலாய் சகோதரர்களும் எளிதில் மயங்கி விட மாட்டார்கள். ஒரு சிலரை வேண்டுமானால் அது கவரலாம். மசீச-வையும் கெரக்கானையும் அது திருப்பி அடிக்கப் போகிறது.
ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடிப்பதாக அம்னோ எண்ணலாம். குறுகிய காலத்திற்கு வேண்டுமானால் அது அதனைச் சாதிக்கலாம். ஆனால் நீண்ட கால அடிப்படையில் அது வீழ்வது திண்ணம். அடுத்தடுத்த நிகழ்வுகளைப் பொறுத்திருந்து பாருங்கள்.
ரென் அலி: அண்மைய காலமாக மே 13 அம்னோ அரசியல்வாதிகள் சிந்தனையில் உதித்திருப்பதில் வியப்பில்லை. அவர்கள் தேச நிந்தனை உடைய மக்களை பிளவுபடுத்தும் திரைப்படத்தை ரகசியமாக தயாரித்திருக்க வேண்டும்.
வீரா: தாங்கள் மீண்டும் தேர்வு செய்யப்படுவதற்கு பணம் உதவாது என்பதை அறிந்ததும் அந்த அம்னோ போக்கிரிகள் அச்சத்தை மூட்டுகின்றனர். ஒரு சமூகத்தை இன்னொரு சமூகத்துக்கு எதிராகத் தூண்டி விடுகின்றனர்.
நல்ல வேளையாக மாற்று ஊடகங்கள் உள்ளன. அவர்களுடைய தீய எண்ணங்களை நாம் அறிய முடிகின்றது. இல்லை என்றால் 1969-ஐ போன்று எல்லாம் குழப்பமாகி இருக்கும்.
குரல்: சீன வாக்காளர்கள் மீது அம்னோ/பிஎன் ஆட்சி முற்றாக நம்பிக்கை இழந்து விட்டதாகத் தோன்றுகிறது. இழந்த மலாய் ஆதரவை மீட்பதே அவற்றின் நோக்கம். அது பற்றியே அவை அதிகம் கவலைப்படுகின்றன. ஆனால் விழித்துக் கொண்ட இந்த சமுதாயத்தில் மக்களை ஏமாற்ற முடியாது.
பெண்டர்: அந்தத் திரைப்படத்தைப் பார்த்து அம்னோ ஆதரவு வலைப்பதிவாளர் பாப்பாகாமோ கண்ணீர்விட்டார் என்றால் அது நிச்சயம் அம்னோ பிரச்சாரம் தான்.
சிவிக்: மே 13 ஒரு காலத்தில் பேசக் கூடாத விஷயமாகக் கருதப்பட்டது. அது நமது வரலாற்றில் இருண்டபகுதியாகும். மலாய்க்காரர்களாக, சீனர்களாக, இந்தியர்களா இருந்தாலும் நமது பெற்றோர்கள் அது பற்றிப் பேசக் கூடாது என நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளனர்.
ஆனால் இன்று எல்லாவாற்றையும் இழக்கும் தறுவாயில் உள்ள பிஎன் அதனை தலைப்பு விஷயமாக மாற்றி விட்டது. அமைச்சர்கள் அடிக்கடி அதனை நினைவுபடுத்துகின்றனர் அல்லது அதனைக் கூறி மருட்டுகின்றனர். இப்போது வெள்ளித் திரையிலும் அது வெளியாகி விட்டது.
பாசத்துக்குரிய அகோங் அவர்களே இந்த அபத்தங்களை நிறுத்துவதற்கு ஏதாவது செய்யுங்கள் என உங்களுடைய பணிவான பிரஜைகளாகிய நாங்கள் உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம். பிஎன் மலேசியாவை நரகத்திற்குள் கொண்டு செல்கிறது. காலம் கடப்பதற்கு முன்னர் அதனை நிறுத்துங்கள்.