பள்ளிகளில் கைபேசிகளை அனுமதிப்பது தேவையற்றது

பள்ளிகளுக்குக் கைபேசிகளையும் மற்ற மின்னியல் கருவிகளையும் கொண்டுவர அனுமதிக்கப்படும் என்று கல்வி அமைச்சு மொழிந்துள்ளதற்கு டிவிட்டர் மக்களிடையே வரவேற்பு இல்லை.

சிலர் அந்த முடிவை வரவேற்றாலும் வரவேற்பதற்குத் தகுந்த காரணங்களை அவர்களால் முன்வைக்க முடியவில்லை.

ஆனால் டிவிட்டர்ஜெயாவில் பெரும்பாலோருக்கு அது அனுமதிக்கப்படுவதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

அதன் தொடர்பில் டிவிட்டரில் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள்:

Nurul Farahain @farahsahudin: நாம் கைபேசிகள் இல்லாமல்தான் பள்ளி நாள்களைக் கடந்து வந்திருக்கிறோம். அவர்களாலும் முடியும். இது ஒரு பிரச்னையே அல்ல.

Muhammad Nazmi @nazmigendutt: பள்ளிகளில் கைபேசிகள், ஐ-பேட்கள்? வருங்காலத் தலைமுறையைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

Yusuf @hazardgeek: மாணவர்கள் ஓடிப் பிடித்து விளையாட மாட்டார்கள். இடைவேளை முழுவதையும் கைபேசியுடன்தான் கழிப்பார்கள்.

Fakhira Mukhtar @FakhiraMukhtar: பள்ளிகளில் கைபேசிகள் அனுமதிக்கப்பட்டால் மாணவர்கள் கலந்து பழகுவதையே மறந்து விடுவார்கள்.

DNN G @DeliaGallagherr: பெரும்பாலான மாணவர்கள் அதைத் தவறாகத்தான் பயன்படுத்திக்கொள்வார்கள். பிரதமர் அவர்களே, வருங்காலத் தலைமுறையின் எதிர்காலத்தையே கெடுத்து விட்டீர்கள்.

Faizal Dardin @faizaldardin: அங்கும் இங்கும் படித்துப் பார்த்ததில் ஒன்றும் மட்டும் உறுதியாக தெரிகிறது .மாணவர்கள் பள்ளிகளுக்கு கைபேசிகள் கொண்டு வர அனுமதிப்பது தேவையில்லாத ஒன்று.

Radziman Mazlan @ajimmzln: அடுத்த ஆண்டிலிருந்து மாணவர்கள் பள்ளிகளுக்கு கைபேசிகள் கொண்டு வர அனுமதிக்கப்படுமா? இது,கல்வித் தரம் சீர்கெட்டுப் போவதற்கான அறிகுறி.

Stephen Doss @stephendoss: பள்ளிகளில் கைபேசிகள் இருப்பவர்களையும்  இல்லாதவர்களையும் பிரித்துக் காண்பிக்கும் இன்னொரு பொருளாகத்தான் விளங்கும்.

The KaV Knight Rises @kavilan:சமூக ஏற்றத்தாழ்வை மேலும் அதிகரிக்கும்.இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்?

Wong Zhiwei @WongZhiwei: பள்ளிகளில் கைபேசிகளை அனுமதிக்க வேண்டிய அவசியமே இல்லை.

Anonymous @asyrafzabani:கல்விமுறையே சீர்கெட்டுப் போயுள்ளது. மாணவர்கள் கைபேசிகளுடன் வரலாம். அடுத்து என்ன? டிவி கொண்டுவரலாமா?

Syana’s @SyazanaAriffin: கவனம் கைபேசியில்தான் இருக்கும். ஆசிரியர்மீது இருக்காது.

Lavishya Ratti @LavishyaR: மாணவர்கள் அதைத் தவறாகத்தான் பயன்படுத்துவார்கள்.

பதின்ம வயதினரைக் கவரும் முயற்சியா?

அரசாங்கம் மாணவரிடையே புகழ்பெறுவதற்காக இப்படி ஒரு முடிவைச் செய்திருப்பதுபோல் தெரிகிறது. ஆனால், இதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதைப் புறக்கணிக்கப்பதற்கில்லை.

கைபேசிகளால் பாடங்களில் கவனம் செலுத்துவது குறையும் என்பதுடன் வேறு பல பிரச்னைகளும் உருவாகலாம்.

பள்ளிகளில் முன்பு அழிப்பான்களும் பென்சில் பெட்டிகளும் திருடு போகும். இனி, கைபேசிகள் ஐபேட்கள் திருடும் கலாச்சாரம் உருவாகலாம்.

அத்துடன் அது, இருப்பவர்களையும் இல்லாதவர்களையும் பிரித்து வைக்கும் சின்னமாக விளங்கும் என்பதுடன் அவர்களிடையே பகட்டுத்தனம், கர்வம் முதலிய தகாத பண்புகள் மேலோங்கவும் தூண்டுதலாக இருக்கும்.

டிவிட்டரில் கருத்து பதிவு செய்த பலரும் இப்போதைக்குக் கல்வி அமைச்சுக்கு கல்வியில் அவ்வளவாக அக்கறை இல்லை என்றும் பதின்ம வயதினரை அமைதிப்படுத்தவதில்தான் அது கவனம் செலுத்துகிறது என்றும் நினைக்கிறார்கள்.