குவாந்தானில் புதிய சீன உயர்நிலைப்பள்ளி – ஒப்புதல்!

ஒப்புதல் கிடைத்து விட்டது என்று மசீச அறிவித்த மூன்று மாதங்களுக்குப் பின்னர், கல்வி அமைச்சு குவாந்தானில் ஒரு புத்தம் புதிய சுயேட்சை சீன உயர்நிலைப்பள்ளிக்கு ஒப்புதல் அளிக்கும் கடிதத்தை வழங்கியுள்ளது.

இப்பள்ளி ஸ்கோலா மெனெங்கா சோங் ஹவா (Sekolah Menengah Chong Hwa) என்று பெயரிடப்படும். கோலாலம்பூர் சோங் ஹவா சுயேட்சை சீன உயர்கல்வி பள்ளிக்கூடம் (Kuala Lumpur Chong Hwa independent Chinese school)  “கேட்டுக்கொண்டபடி ஒப்புதல்” வழங்கப்பட்டது என்று துணைக் கல்வி அமைச்சர் வீ கா சியோங் கூறினார்.

இது இப்பள்ளி மாணவர்கள் யுஇசி (Unified Examination Certificate) மற்றும் எஸ்பிஎம் (Sijil Pelajaran Malaysia) ஆகிய இரு தேர்வுகளுக்கும் அமர வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஒப்புதல் கடிதத்தை அமைச்சின் தலைமை இயக்குனர் அப்துல் கபார் மாமுட் கோலாலம்பூர் சோங் ஹவா உயர்நிலைப்பள்ளி துணைத் தலைவர் லிம் இயு ஜின்னிடம் வழங்கினார். வீ கா சியோங், மசீச தலைவர் சுவா சோய் லெக் மற்றும் மலேசிய சீன அமைப்புகளின் சம்மேளனத்தின் தலைவர் பெங் இன் ஹுவாவும் உடனிருந்தனர்.