உங்கள் கருத்து: “மலேசிய வரலாற்றின் மிக முக்கியமான நாளை எதிர்வரும் தேர்தலுக்குப் பயன்படும் அரசியல் கருவியாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.”
தேசிய நாள் பாடல் ‘அசிங்கமான பரப்புரை’ என்கிறார் பாடலாசிரியர்
சின்னபையன்: பாடலாசிரியர் புத்தி ஹிகாயாட் கூறுவதை முழுமையாக ஏற்கிறேன். தேசிய நாள் கருப்பொருள் பாடல் பிஎன் அரசின் பரப்புரையே தவிர வேறல்ல.தேசிய நாள் கொண்டாட்டத்தின் உண்மையான நோக்கங்களை அது புரிந்துகொள்ளவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.
என்ன தெனாவெட்டு பிஎன்னுக்கு. தேசிய நாள் கொண்டாட்டத்தை நாட்டுக்குரியதாக நினைக்கவில்லை, அவர்களுக்கு மட்டுமே உரியதாக நினைக்கிறார்கள்.
டூட்: அது அம்னோ-பிஎன் கூட்டங்களுக்கு மட்டுமே பொருத்தமானது.
குழப்பமற்றவன்: வேறு யாரும் புகழ்வதில்லை அதனால் சுயமாக புகழ் பாடிக்கொள்கிறார்கள்.அது தேசிய நாளுக்குப் பொருந்தாத பாடல். அப்பட்டமான தேர்தல் பரப்புரை.
சுவாத்: நாட்டு மக்களை ஒன்றுபடுத்த இதுவரை உருப்படியான ஒரு வார்த்தைகூட உதிர்க்காதவர் தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம்.இப்போது பாட்டெழுதப் புறப்பட்டு விட்டார்.
சான் ஹுவான் பூன்: முதலில் பாடலை முகநூலில் பார்த்தபோது எவரோ தகவல் அமைச்சரைக் கிண்டல் செய்வதாகத்தான் நினைத்தேன். இது தேசிய நாள் கருப்பொருள் பாடலா, நம்ப முடியவில்லை.
கீ துவான் சை: பாடல் வரிகள் தேசிய நாளுக்குரியவை அல்ல.பாரிசான் தேசிய நாளுக்குத்தான் அவை பொருத்தமானவை.
லூயிஸ்: பாடல்வரி சிறுபிள்ளைகளின் கிறுக்கல் போன்றிருக்கிறது.மூன்றாம் படிவ மாணவன்கூட இதைவிட நன்றாக எழுதுவான்.
ம்ம்ம்ம்: பிஎன்னுக்கு நேரம் நல்லா இல்லை என்பதைத்தான் காண்பிக்கிறது.
பெயரிலி _40a7: அதிகாரத்தைத் தன்வசமே வைத்துக்கொள்ள பிஎன் மேற்கொள்ளும் பரிதாபகரமான, அருவெறுக்கத்தக்க முயற்சி.மலேசிய வரலாற்றின் மிக முக்கியமான நாளை எதிர்வரும் தேர்தலுக்குப் பயன்படும் அரசியல் கருவியாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
பெயரிலி #88975568: “balas budi” யாம். மக்களிடமிருந்து என்ன நன்றிக்கடனை எதிர்பார்க்கிறார்கள்? நாட்டுக்கு முன்னேற்றத்தைக் கொண்டுவருவது அரசாங்கத்தின் கடமை, இல்லையா.
ஜார்: வெட்கம் கெட்டவர்கள்.நாட்டை ஆளும் அதிகாரத்தைக் கொடுத்ததற்கு மக்களிடமே நன்றியையும் எதிர்பார்க்கிறார்கள்.
உண்மையில் அதிகாரத்தைக் கொடுத்த மக்களுக்கு அவர்கள்தான் நன்றி தெரிவிக்க வேண்டும்.அவர்கள் அம்னோ ஆள்களாயிற்றே. அதுதான் மக்கள்சேவை என்றால் என்னவென்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள்.