டிஏபி தலைவர் கர்பால் சிங், ஜனநாயக ஆதரவாளர் என்பதால் மலேசியாவில் ஹூடூட் அமலாக்கப்படுவதை ஆதரிப்பதுதான் முறையாகும் என்று பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி வலியுறுத்தியுள்ளார்.
இன்று கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய இப்ராகிம் அலி, மலேசியாவில் பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்கள் என்றும் ஜனநாயகத்தில் பெரும்பான்மைதான் வெற்றிபெறும் என்றும் கூறினார்.
“பெரும்பான்மையினர் ஹூடூட்டை விரும்பினால் அவர் அதை எதிர்க்கக்கூடாது”, என்றவர் சொன்னார்.
“ஹூடூட் சட்டம் முஸ்லிம்களின் அடிப்படை உரிமையாகும்”, என்றாரவர்.
மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக அதற்கு மறுப்புத் தெரிவிப்பது நல்லதல்ல.
“இந்து பக்தர்கள் தைப்பூசத்தின்போது பத்து மலைக்கு ஊர்வலம் செல்கிறார்கள்.வழியில் தேங்காய்கள் உடைக்கிறார்கள்.போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.ஆனால், அது அவர்களின் சமயப் பழக்கவழக்கமாகும்”