ராயிஸ்: 114 ஏ பிரிவு மீது அமைச்சரவை உறுதியாக உள்ளது. ஆனால் அதனை ஆய்வு செய்யும்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் உத்தரவுக்கு இணங்க, இணைய உலகில் அதிகமாக விவாதிக்கப்படும் 1950ம் ஆண்டின் ஆதாரச் சட்டத்தின் 114 ஏ பிரிவை அமைச்சரவை ‘கவனமாக ஆய்வு’ செய்கிறது.

அரசாங்கம் அந்த விவகாரத்தில் உறுதியான நிலையைக் கடைப்பிடிக்கிறது எனக் கூறிய தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம், அந்தச் சட்டத்தில் புதிய திருத்தங்களைச் செய்யும்திட்டம் ஏதும் இது வரையில் இல்லை எனச் சொன்னார்.

அந்தச் சட்டத்தில் செய்யப்பட்ட இரண்டு திருத்தங்களில் ஒன்று 114 ஏ பிரிவு திருத்தமாகும். அது குறித்து இணையப் பயனாளிகளிடையே பல வகையான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

‘114 ஏ’யை நிறுத்துங்கள் என்ற தலைப்பில் சிஐஜே என்ற சுதந்திர இதழியல் மய்யம் ஒர் இயக்கத்தை அந்தச் சட்டத்துக்கு எதிராகத் தொடங்கியுள்ளது.

அந்த இயக்கம் தொடர்பான விவரங்கள் முக நூலில் காணப்பட்டுகின்றன. அவற்றை இணையப் பயனாளிகள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

அந்த நிலைமை தற்போது மெக்காவில் நடைபெறும் இஸ்லாமிய மாநாட்டு நிறுவனச் சிறப்பு உச்ச நிலைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள பிரதமரது கவனத்தை ஈர்த்தது.

அதனைத் தொடர்ந்து 114 ஏ பிரிவை மீண்டும் விவாதிக்குமாறு பிரதமர் டிவிட்டர் மூலம் அமைச்சரவையைக் கேட்டுக் கொண்டார். இப்போது அந்தப் பிரிவு ஆய்வு செய்யப்படுகின்றது.

அந்தப் பிரச்னை மீது பிரதமர் அனுப்பியுள்ள டிவிட்டர் செய்தியிலிருந்து அமைச்சரவை அவரது எண்ணத்தை அறிந்து கொண்டதாக ராயிஸ் மேலும் சொன்னார்.

நேற்றிரவு புத்ரா பள்ளிவாசலில் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை, கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய சமய மன்றம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் அவரது அமைச்சு ஏற்பாடு செய்த நோன்பு துறக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ராயிஸ் நிருபர்களைச் சந்தித்தார்.

பெர்னாமா