டாத்தாரான் மெர்தேக்கா சிவில் சிவில் சமூக அமைப்புக்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்வுக்கு இப்போது “Janji Demokrasi (ஜனநாயகத்துக்கான வாக்குறுதி) பெயரிடப்பட்டுள்ளது.
மெர்தேக்கா தினத்தை “Janji Demokrasi” உணர்வுடன் கொண்டாடுவதே அந்த நிகழ்வின் நோக்கம் என 49 அரசு சாரா அமைப்புக்களைக் கொண்ட Gabungan Janji என அழைக்கப்படும் புதிய குழு கூறியது.
ஏற்கனவே 26 அரசு சாரா அமைப்புக்கள் ஏற்பாடு செய்த “Janji Bersih”யின் மறு பிறவியாக “Janji Demokrasi” இருக்கும்.
கூட்டரசு அரசாங்கம் மெர்தேக்கா தினத்துக்கு அறிவித்துள்ள “Janji Ditepati” கருப் பொருளுக்கு இணையாக அது திகழும்.
பெர்சே 2.0ன் எட்டுக் கோரிக்கைளையும் உண்மையான தேர்தல் சீர்திருத்தங்களுக்கான வாக்குறுதிகளை கூட்டரசு அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பதையும் அதற்கு நினைவுபடுத்தும் பொருட்டு அந்த நிகழ்வுக்கு தொடக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
சில ஊடக நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளது போல அந்தக் குழு பெர்சே 2.0ஐ பிரதிநிதிக்கவில்லை என Gabungan Janji வலியுறுத்தியது.
மிகவும் சிறப்பான முறையில் மெர்தேக்கா தினத்தைக் கொண்டாடுவதற்கு Gabungan Janji மலேசியர்களை அழைக்கிறது. We, people of all races, will gather at Dataran Merdeka peacefully
அனைத்து இனங்களையும் சேர்ந்த மக்களாகிய நாங்கள் டாத்தாரான் மெர்தேக்காவில் அமைதியாக கூடுவோம்.
பெர்லிஸ் முதல் ஜோகூர் வரையில் சபா, சரவாக்கில்- மெர்தேக்கா தினத்துக்கு முந்திய தினம் மஞ்சள் நிற உடையை அணியுமாறு எல்லா மலேசியர்களையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்,” என அந்த அமைப்பு விடுத்த அறிக்கை கூறியது.