Janji Demokrasi என்ற கூட்டத்துக்கு குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் வருவர் என உள்துறை அமைச்சர் ஆரூடம் கூறியுள்ளது ஒரு விஷயமே அல்ல என அதன் ஏற்பாட்டுக் குழுப் பேச்சாளர் ஹிஷாமுடின் ராயிஸ் கூறியிருக்கிறார்.
“உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன், எதிர்காலத்தை கணிக்கும் bomoh-வாக அல்லது Pak Nujum-ஆகக் (எதிர்காலத்தை முன்னறிந்து சொல்கின்றவர்) கூடிய ஆற்றலைப் பெற்றிருப்பது கண்டு நான் அவரை உண்மையிலேயே மிகவும் பாராட்டுகிறேன்.”
“அது நல்லது. அது உண்மையில் நல்லது. எங்களைப் பொறுத்த வரையில் கூட்டம் எவ்வளவு பெரியது, கூட்டம் எவ்வளவு சிறியது என்பது கேள்வி அல்ல. அன்றிரவு மக்கள் மஞ்சள் உடையை அணிந்து வருவது தான் முக்கியம்,” என்றார் அவர்.
பெர்சே 3.0 பேரணியின் போது நிகழ்ந்த வன்முறைகள், Janji Demokrasi என்ற கூட்டத்துக்குப் பலரை வராமல் செய்து விடும் என்பதால் கூட்டம் குறைவாக இருக்கும் என அமைச்சர் விடுத்துள்ள அறிக்கை பற்றி வினவப்பட்ட போது ஹிஷாமுடின் ராயிஸ் அவ்வாறு கூறினார்.