கார் விலைகளைக் குறைக்கும் தனது திட்டம் கார் தயாரிப்பு நிறுவனமான புரோட்டோனையும் உள்நாட்டு வாகனத் தொழிலில் ஈடுபட்டுள்ள பூமிபுத்ரா வர்த்தக சமூகத்தையும் பாதிக்காது என பிகேஆர் இன்று கூறியுள்ளது.
பிகேஆர் திட்டம் புரோட்டோனையும் பூமிபுத்ரா வர்த்தக சமூகத்தையும் பாதிக்கும் என அம்னோவும் பிஎன் -னும் கூறிக் கொள்வது தவறு என பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார், வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில், பிரச்சாரப் பிரிவுத் துணைத் தலைவர் சிம் சூ சின் ஆகியோர் கூட்டாக விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்கள் மீதான கலால் வரிகளைக் குறைப்பதால் புரோட்டோனும் உள்நாட்டு வாகனத் தொழிலும் நசித்துப் போகும் எனக் கூறுவதின் வழி இன உணர்வுகளை அம்னோ, பிஎன் தலைவர்களை தூண்டுவதாக அவர்கள் கூறிக் கொண்டனர்.
“அந்த யோசனை புரோட்டோனைக் கொன்று அதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பெரும்பாலும் மலாய்க்காரர்களும் பூமிபுத்ராக்களும் தங்கள் வேலைகளை இழப்பர் எனக் குற்றம் சாட்டுவது, மக்களிடையே இனப் பிரிவினை விதைகளை தூவும் நோக்கத்தை கொண்ட பொறுப்பற்ற நடவடிக்கை,” எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
என்றாலும் 2005ம் ஆண்டு தொடக்கம் புரோட்டோனுக்கு கலால் வரிக் கழிவுகளை வழங்குவதைக் கூட்டரசு அரசாங்கம் நிறுத்திக் கொண்டு விட்டதால் அந்த கார் தயாரிப்பு நிறுவனம் மென்மேலும் சிறந்த முறையில் இயங்குவதற்கான ஆற்றலைப் பெற்றுள்ளது என அந்த மூவரும் நம்பிக்கை தெரிவித்தனர்.
“அப்போது தொடக்கம் புரோட்டோனும் மற்ற தேசிய வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் அந்நியக் கார்களுக்கு விதிக்கப்படும் அதே கலால் வரியை செலுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.”
“புரோட்டோன் பெற்று வரும் பெரிய அளவிலான நிதி உதவி, இப்போது வரி பாதுகாப்பு வடிவத்தில் கொடுக்கப்படவில்லை என்றும் சிறந்த வடிவமைப்பையும் தொழில்நுட்பத்தையும் பெறுவதற்காக ஆய்வு மேம்பாட்டு மானியங்கள் கொடுக்கப்படுகின்றன,” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
2011ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி முடிந்த நிதி ஆண்டுக்கான புரோட்டோன் நிதி அறிக்கையில் ஆய்வு மேம்பாட்டு மானியமாக 175 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது,” என அவர்கள் விளக்கினர்.