நேற்று தொடங்கிய பிகேஆரின் Jelajah Merdeka Rakyat பயணத்தொடர் கோத்தா பாருவில் அதன் பேருந்துகளில் ஒன்று தாக்கப்பட்ட சம்பவத்தால் களங்கமுற்றது.
பிகேஆரின் மூன்று-நாள் பயணத் திட்டத்தில் அக்கட்சி செல்லும் இரண்டாவது இடம் கிளந்தான் ஆகும்.
அங்கு அச்சம்பவம் இன்று காலை சுமார் 5மணிக்கு நிகழ்ந்தாக பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.
பேருந்து ஒட்டுனர் பக்கமாகவுள்ள கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டு சிவப்புச் சாயம் வீசி எறியப்பட்டது.இன்னொரு கண்ணாடியும் நொறுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
தாக்குதல்காரர்கள் யார் என்பது தெரியவில்லை.ஆனால், அவர்கள் “samseng bermaharajalela” என்று அன்வார் குறிப்பிட்டிருந்தார்.
கோத்தா பாரு சித்தி கதிஜா மார்க்கெட்டுக்கு எதிரில் அதிகாலையில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக அன்வாரின் உதவியாளர் நஜ்வான் ஹலிமி கூறினார்.ஆது பற்றி போலீசில் புகார் செய்யப்படும் என்றும் அவர் சொன்னார்.
பேருந்து சுற்றுலா வழி 55வது மெர்டேகா தினத்தைக் கொண்டாடுவது பிகேரின் திட்டமாகும்.
அதில் முதல் கட்டமாக அன்வாரும் அவரின் துணைவியார் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலும் நேற்று பகாங், பெந்தோங் சென்றனர்.அங்கு 300 பேர் அவர்களை வரவேற்றனர்.
கட்சியின் தொடர்பு இயக்குனார் நிக் நஸ்மி நிக் அஹ்மட், வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி முதலானோரும் அந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
‘Jelajah Merdeka Rakyat’பயணத்தில் மூன்று நாள்களில் ஐந்து மாநிலங்களுக்கு-பகாங், கிளந்தான்,பேராக், கெடா, பெர்லிஸ்-செல்லவும் 20நிகழ்வுகளில் கலந்துகொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது