எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட் உறுப்புக் கட்சிகள் போட்டியிடும் இடங்களுக்கான ஒதுக்கீடுகள் கிட்டத்தட்ட செய்யப்பட்டு விட்டதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.
மேற்கொண்டு யோசனைகள் ஏதும் தெரிவிக்கப்பட்டால் இணக்க அடிப்படையில் பேச்சுக்கள் நடத்தப்படும் என அவர் சொன்னார்.
“புதிய யோசனைகள் இருந்தால் நாங்கள் அதனை விவாதிப்போம். கிளந்தான் தயாராகி விட்டது. பினாங்கில் ஏறத்தாழ முற்றுப் பெற்று விட்டது,” என அவர் நிகழ்ச்சிக்குப் பின்னர் நிருபர்களிடம் பேசினார்.
ஹுடுட் சட்ட அமலாக்கம் பற்றிக் குறிப்பிட்ட அன்வார், தேசிய நிலையில் அதன் அமலாக்கம் கூட்டரசு அரசமைப்பில் திருத்தங்களைச் செய்வதைச் சார்ந்திருப்பதாகத் தெரிவித்தார்.
பெர்னாமா