கிட் சியாங்: கொடியை மாற்றுவது பக்காத்தான் திட்டமல்ல

ஜாஞ்சி டெமாக்கரசி பேரணியின் போது நிகழ்ந்த கொடி சம்பவத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பக்காத்தான் அறிவித்துள்ளது.

தேசியக் கொடியை மாற்றுவது பக்காத்தான் திட்டங்களில் ஒரு பகுதியாக எப்போதும் இருந்தது இல்லை என டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் வெளியிட்ட அறிக்கை கூறியது.

டாத்தாரான் மெர்தேக்காவில் நடைபெற்ற மெர்தேக்கா கொண்டாட்டங்களுக்கு இந்தோனிசியாவின் Sang Saka Merah Putih கொடியைப் போன்று தோற்றமளிக்கும் ஆனால் மலேசியாவின் மஞ்சள் நிற பிறையையும் நட்சத்திரத்தையும் கொண்டிருந்த கொடிகளை இளைஞர் குழு ஒன்று கொண்டு வந்தது மீது லிம்-மின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதற்குப் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர்கள் தேசியக் கொடியை மாற்ற விரும்புவதாகவும் பல தேசிய எதிர்ப்பு மாற்றங்களைக் கொண்டு வர எண்ணியுள்ளதாக பிஎன் தலைவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

“தங்கள் தளபத்தியத்தின் கீழ் அனைத்து போலீஸ், உளவுத் துறைகள் இருக்கும் வேளையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கும் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனுக்கும்  தேசியக் கொடியை பக்காத்தான் ராக்யாட் மாற்ற விரும்புகிறது எனக் கருதுவதற்கு முற்றாக எந்த ஆதாரமும் இல்லை எனத்  தெரியாது என்பதை நான் நம்பவில்லை,” என்றார் லிம்.

13வது பொதுத் தேர்தலில் தனது வாய்ப்புக்கள் குறைவாக இருப்பதால் அடைந்துள்ள விரக்தியால் அம்னோவும் பிஎன் -னும் பக்காத்தான் நாட்டுக்கு விசுவாசமாக இல்லை என்றும் அரசர் முறையை அகற்ற அது விரும்புகிறது என்பது உட்பட தேசிய எதிர்ப்புப் போக்கைப் பின்பற்றுகின்றன என்றும் குற்றம் சாட்டுவதாகவும் லிம் குறிப்பிட்டார்.

“2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட ‘Buku Jingga’ மலேசிய அரசமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை அம்சங்களைக் குறிப்பாக அரசமைப்புக்கு உட்பட முடியாட்சி முறையின் பங்கையும் பொறுப்பையும் தற்காப்பதாக பக்காத்தான் வலியுறுத்தியுள்ளது.”