பெற்றோர் அமைப்பு: கல்விப் பெருந்திட்டத்தில் வலு ஏதுமில்லை

புதிய கல்விப் பெருந்திட்டம் குறித்து Page எனப்படும் பெற்றோர் நடவடிக்கைக் குழு ஏமாற்றம் தெரிவித்துள்ளது.

அதில் ‘புதிதாக ஒன்றுமில்லை’ என்றும் அது வருணித்தது.

 

அந்தப் பெருந்திட்டம் மீதான பூர்வாங்க அறிக்கை கல்வி அமைச்சின் பொறுப்புக்களுக்கு ‘மறு பெயரிட்டுள்ளது’ என அந்த அமைப்பின் தலைவர் நூர் அஸிமா அப்துல் ரஹிம் கூறினார்.

“வியக்கத்தக்க அல்லது வலிமை தரும் அம்சம் அதில் இல்லை. அமைச்சின் பொறுப்புக்களாக உள்ள விஷயங்களுக்கு அடிப்படையில் மறு தோற்றம் அல்லது மறு பெயர் வழங்கப்பட்டுள்ளது,” என்றார் அவர்.

கோலாலம்பூரில் இன்று அந்தப் பெருந்திட்டம் வெளியிடப்பட்ட பின்னர் அவருடன் தொடர்பு கொள்ளப்பட்டது. கணித அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிப்பது போன்ற “சூடான தலைப்புக்களை” அது தவிர்த்துள்ளது பற்றியும் நூர் அஸிமா  ஏமாற்றம் தெரிவித்தார்.